மேலும் அறிய

Pongal 2022 | தமிழர் திருநாளில் இளவட்டக்கல் தூக்கப்படுவது ஏன்? இந்த போட்டிக்கு இவ்வளவு மவுசா?

"கடைக்கண் பார்வைதனை கன்னியர்கள் காட்டிவிட்டால் மண்ணில் மாந்தர்கு மாமலையும் ஓர் கடுகாம்!"

முந்தைய காலங்களில் தமிழ் ஆண் மக்களின் வீரத்தை பறைசாற்றும் பல்வேறு வீர விளையாட்டுகள் நடப்பதுண்டு. வீர விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக பெண்ணை திருமணம் முடித்துக் கொடுக்கும் வழக்கம் இருந்ததும் உண்டு.  புராண இதிகாச,  இலக்கியங்களிலும் கூட ஒரு விளையாட்டு அல்லது போட்டியில் வெற்றி பெற்ற வீர ஆண்மகனுக்கு அந்த விளையாட்டை அல்லது போட்டியை நடத்தியவர்கள் சார்பில் வெற்றி பெற்ற வீர ஆண்மகனுக்கு பெண்ணை திருமணம் செய்து வைக்கும் வழக்கத்தை காண முடிகிறது. தமிழர் பண்பாடுகளில் தலைசிறந்ததாக சங்க இலக்கியம் தொட்டே காதலும் வீரமும் பேசப்பட்டு வருகிறது.. அந்த வகையில் வீரம் நிறைந்த ஆண்மகனை ஒரு பெண்ணுக்காக தேர்ந்தெடுக்கும் முயற்சிக்காக காளையை அடக்குதல், இளவட்டக் கல் தூக்குதல், என ஒரு ஆணின் வீரத்தை பரிசோதிக்கும் விளையாட்டுகளும், போட்டிகளும் நடத்தப்பட்டுள்ளன.

Pongal 2022 | தமிழர் திருநாளில்  இளவட்டக்கல் தூக்கப்படுவது ஏன்? இந்த போட்டிக்கு இவ்வளவு மவுசா?இன்றைய காலகட்டத்தில் இத்தகைய வழக்கம் மறைந்து போய்விட்டாலும் தமிழர்கள் வாழும் பல மாவட்டங்களில் பல சிற்றூர்களில் இன்றும் இளவட்ட கல்லை தூக்கும் போட்டி நடைபெற்றுதான் வருகிறது. ஆனால் அவற்றிற்கும் பரிசாக வெற்றி பெற்ற ஆண் மகனுக்கு ஒரு பெண்ணை திருமணம் முடித்து வைக்கும் வழக்கம் இல்லாமல் மாறாக பரிசு தொகையும், பொருட்களும் வழங்கப்படுகிறது. 

இளவட்டக்கல்  60 கிலோ , 90 கிலோ , 114 கிலோ , 140 கிலோ எடைகொண்டதாகவும், முழு உருண்டையாக வழவழவென்று எந்தப்பிடிப்பும் இல்லாமல் கைக்கு அகப்படாத வடிவத்தில் இருக்கும். இளவட்டக் கல்லுக்குக் கல்யாணக் கல் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இளவட்டக்கல்லைச் சுமப்பதில் பல படிநிலைகள் உண்டு. முதலில்  முழங்காலிட்டு உட்கார்ந்த நிலையில் கல்லை இருகைகளாலும் சேர்த்தணைத்து இலேசாக எழுந்து கல்லை முழுங்காலுக்கு நகர்த்தி பின்னர் முழுதாக நிமிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லை நெஞ்சின் மீது ஏற்றி பின்னர் தோள்பட்டைக்கு நகர்த்தி முழுவதுமாக சுமக்க வேண்டும். தோள்பட்டைக்கு இளவட்டக்கல் வந்துவிட்டால் அடுத்துக் கழுத்தை சுற்றி கீழே போட வேண்டும்.  தமிழரின் உடல்பலத்திற்கும் வீரத்திற்கும் சாட்சியாகத் திகழ்ந்த இந்த இளவட்டக் கற்கள் இன்றைக்குப் பல ஊர்களில் தம்மைத் தூக்கிச் சுமப்பார் யாரும் இல்லாமல் பாதியளவு மண்ணில் புதைந்து கிடக்கும் பரிதாபத்தை நாம் காணலாம். இப்படி பாதியளவு புதைந்த இந்த கல்லில் குத்தவைத்து உட்கார்ந்து ஊர்கதைகள் பேசவும் , வேடிக்கை பார்க்கவும் பயன்படுத்துகின்றனர்.  

Pongal 2022 | தமிழர் திருநாளில்  இளவட்டக்கல் தூக்கப்படுவது ஏன்? இந்த போட்டிக்கு இவ்வளவு மவுசா?

தை முதல் நாள் தமிழர் திருநாள் கொண்டாடப்படும் நிலையில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் வீர விளையாட்டான இளவட்டக்கல் தூக்கும் போட்டி நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளையில்  ஆண்டு தோறும் பொங்கல் அன்று நடைபெற்று தான் வருகிறது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடக்கும் இளவட்டக்கல் தூக்குதல், உரலை தூக்கி ஒத்த கையில் நிறுத்துதல் போன்ற விளையாட்டு போட்டிக்காக தற்போது இளைஞர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர். இளவட்ட கல்லை எல்லோரும் தூக்கி விட முடியாது. அதற்கான முறையான பயிற்சி இருந்தால் மட்டுமே தூக்க முடியும் இல்லை என்றால் தசைபிடிப்பு ஏற்பட்டு விடும். ஆகவே காலையில் உடற்பயிற்சிகளில் இளைஞர்கள் ஈடுபட்டும் வருகின்றனர். பொங்கல் அன்று பல்வேறு பகுதிகளில் பல்வேறு  போட்டிகள் நடத்தப்பட்டாலும்  இங்கு நடைபெறும் இளவட்டக்கல் தூக்கும் போட்டியை  காண வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வருவதும் உண்டு.

இதுகுறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறும் பொழுது,  இளவட்ட கல் தூக்குவதால் உடல் நன்கு வலிமையாக பெறும், அதே போல இந்த கல்லை எல்லோரும் தூக்கி போட முடியாது . உடற்பயிற்சி மிக முக்கியம். உடற்பயிற்சி எடுத்து கொண்டால் தான் உடலுக்கு எந்த பிரச்சனையும் வராது. இல்லை என்றால் உடலில் தசைபிடிப்பு ஏற்பட்டு விடும். மேலும் உரலை கையில் தூக்கி நிறுத்தும் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறோம், இந்த இளவட்ட கல் விளையாட்டை மேலும் ஊக்கப்படுத்த அரசு இளவட்ட கல் தூக்க பயிற்சி கொடுக்க இடம் ஒதுக்க வேண்டும். அனைத்து பகுதிகளிக்கும் இளவட்ட கல் போட்டிகள் நடத்த அரசு முயற்சிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் இந்த விளையாட்டை கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்களின் முயற்சி என்றும் தெரிவித்தனர். 

Pongal 2022 | தமிழர் திருநாளில்  இளவட்டக்கல் தூக்கப்படுவது ஏன்? இந்த போட்டிக்கு இவ்வளவு மவுசா?

கைக்கு அகப்படாத மிகப் பெரிய கல்லை கட்டி அணைத்து தன் முழு வலிமையையும் கல்லின் மீது செலுத்தி தன் மார்பில் சுமந்து பின்பு தோள்பட்டையின் வழியே கழுத்தை சுற்றி கீழே போடும் முறையையே இளவட்ட கல்லை தூக்கி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் சமூக அந்தஸ்து மிக்கவர்களோ, செல்வந்தர்களோ தன்னுடைய பெண்ணுக்கு சரியான வீரமுள்ள ஆண் மகனை மணமுடிக்க தேர்ந்தெடுப்பதற்காக மட்டுமே நடத்தப்பட்டது இம்மாதிரியான போட்டிகள். தற்போதைய கால கட்டத்தில் இப்போட்டி உடல் வலிமை காட்டுவதற்காக மட்டுமே ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் கலந்து கொண்டு இளவட்டக்கல்லை தூக்கி வருகின்றனர்.

முழுமையாக இளவட்ட கல்லை தூக்கி வெற்றி பெறக்கூடிய வலிமையும் ஆரோக்கியமும் இன்றைய இளைஞர்களுக்கும் இருக்கிறதா? என்பதைப் பரிசோதிக்க இன்றளவிலும் ஒரு சில கிராமங்களில் இந்த இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடத்தப்படுகிறது என்பதே உண்மை!!!!!!!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget