தென்காசி : நீதிபதிக்கு பாதுகாப்புக்கு சென்ற காவல் உதவி ஆய்வாளர், துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை..
குற்றாலத்தில் நீதிபதிக்கு பாதுகாப்பிற்கு சென்ற காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழைய குற்றாலத்தில் ஓய்வு பெற்ற நீதிபதியின் பாதுகாவலர் பார்த்திபன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவதற்காக ஜல்லிகட்டு ஆணையத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வருகை தந்தார். அவருடன் அவருடைய பாதுகாவலராக உதவி காவல் ஆய்வாளர் பார்த்திபனும் வந்துள்ளார். அவருக்கு வயது 50. பழைய குற்றாலம் செல்லும் சாலையில் உள்ள தனியார் விடுதியில், இவர்கள் அனைவரும் கடந்த 4 நாட்களாக தங்கி வந்தனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதைக்கேட்ட அதிர்ச்சியடைந்த பலரும் சத்தம் இடம் வந்த நோக்கிச் சென்று பார்த்தபோது உதவி ஆய்வாளர் பார்த்திபன் கழிவறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரது கையில் துப்பாக்கி இருந்தது. இதைக்கண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பார்த்திபன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தற்கொலை செய்து கொண்ட உதவி காவல் ஆய்வாளர், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது மனைவி தீபா. இந்த தம்பதியினருக்கு யுவராஜ் என்ற மகனும், கேசிகா என்ற மகளும் உள்ளனர். தற்கொலை செய்து கொண்ட பார்த்திபன் 1997ல் பணியில் சேர்ந்தார். 2000ல் ஆயுதப்படையில் பணியாற்றினார். பார்த்திபனுக்கு இன்னும் பல ஆண்டுகள் பணிகாலம் உள்ள நிலையில் தற்கொலை செய்து கொண்டார். நீதிபதிக்கு பாதுகாவலராக வந்த காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு உதவி காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் விரைந்து நேரில் பார்வையிட்டு விசாரணை செய்தார். பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பார்த்திபன் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் கைரேகை மற்றும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் சோதனை செய்து வருகின்றனர்.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் படிக்க : Breaking Live: அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்திய பாஜகவினர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்