மேலும் அறிய

கன்னியாகுமரியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள்; ஆர்வம் உள்ள மாணவர்கள் பதிவு செய்யலாம்..!

குமரி மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆர்வம் உள்ள மாணவர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

குமரி மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆர்வம் உள்ள மாணவர்கள் https:// www.tnsports.org.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
 
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கன்னியாகுமரி மாவட்ட பிரிவின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் வரும் 12-ந் தேதி நாகர்கோவில் அண்ணா விளையாட்டங்கத்தில் நடைபெறவுள்ளது. போட்டிகளில் 1-வது வகுப்பு முதல் ஐந்தாவது வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் இளநிலை பிரிவிலும், 6-வது வகுப்பிலிருந்து 12-வது வகுப்பு வரை படிப்பவர்கள் முதுநிலைப் பிரிவிலும் கலந்து கொள்ளலாம்.
 
கன்னியாகுமரியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள்; ஆர்வம் உள்ள மாணவர்கள் பதிவு செய்யலாம்..!
 
போட்டிகள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் ஆண், பெண் இரு பாலருக்கும் நடைபெறும். இளநிலைப் பரிவில் ஒற்றையர் பிரிவில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.500, இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.250, மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.125 மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.1000 வீதமும், இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.500 வீதமும், மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.250 வீதமும், ரொக் கப்பரிசுத் தொகையும் சான்றிதழும் வழங்கப்படுகிறது. மேலும் முதுநிலைப் பரிவில் ஒற்றையர் பிரிவில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.1000, இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.500, மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ. 250 மற்றும் இரட் டையர் பிரிவில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.2000 வீதமும், இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.1000 வீதமும், மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.500 வீதமும், ரொக்கப் பரிசுத் தொகையும் சான்றிதழும் வழங்கப்படும்.
 
போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் https:// www.tnsports.org.in என்ற இணையதளத்தில் District Level Carrom Competition என்பதனை சொடுக்கி (கிளிக்செய்து) தங்களுடைய தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். மேலும் புகைப்படம். கையொப்பம் மற்றும் படிக்கும் பள்ளியிலிருந்து உண்மைச் சான்றிதழினை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இணையதளத்தில் பதிவு செய்யும் மாணவ, மாணவிகள் மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்ள முடியும். மேலும் விபரங்களுக்கு 04652 262060 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பிடிப்பவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அழைத்து செல்லப்படுபவர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Embed widget