மேலும் அறிய

ஜெர்மனி வாலிபரை கரம் பிடித்த குமரி பெண்.....காதல் மலர்ந்தது எப்படி...?

ஜெர்மனியில் உள்ள நிறுவனத்தில் ஆராய்ச்சியாளரக வேலை பார்த்து வந்த நிலையில் காதல் மலர்ந்ததால் கன்னியாகுமரி இளம்பெண்ணை ஜெர்மனி வாலிபர் கரம்பிடித்தார்

ஜெர்மனியில் உள்ள நிறுவனத்தில் ஆராய்ச்சியாளரக வேலை பார்த்து வந்த நிலையில் காதல் மலர்ந்ததால் கன்னியாகுமரி இளம்பெண்ணை ஜெர்மனி வாலிபர் கரம்பிடித்தார். இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் குமரியில் நடந்துள்ளது.
 
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாவூரை சேர்ந்தவர் லாசர். இவருக்கு மரிய செல்வி என்ற மனைவியும், அனீஸ், அருண் என்ற 2 மகன்களும், அனு விண்ணிமேரி (வயது29) என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் அனு விண்ணிமேரி மேற்படிப்புக்காக ஜெர்மனி நாட்டுக்கு சென்றார். அங்கு பவேரியா மாகாணத்தில் ஜூலியஸ் மேக்சி மிலன் பல்கலைக்கழகத்தில் பயோ பிசிக்ஸ் துறையில் படித்தார்.
 
இந்தநிலையில் மேற்படிப்பை முடித்த அனு விண்ணிமேரி அங்கேயே ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது, அதே நிறுவனத்தில் பயோ பிசிக்ஸ் படித்து விட்டு ஜெர்மனி நாட்டை சேர்ந்த ரால்ப் ஜோடல் என்பவரது மகன் பேட்ரிக் சிக்பிரிட் கோடல்(31) என்பவரும் ஆராய்ச்சித்துறையில் பணியாற்றினார். அப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு முதலில் நண்பர்களாக பழகினர். பின்னர், இருவரும் காதலிக்க தொடங்கினர். இதனைத்தொடர்ந்து அனு விண்ணிமேரி தனது காதல் பற்றி ராஜாவூரில் உள்ள பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்களும் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர்.
 
ஜெர்மனி வாலிபரை கரம் பிடித்த குமரி பெண்.....காதல் மலர்ந்தது எப்படி...?
 
இதையடுத்து ஜெர்மனி மணமகன் பேட்ரிக் சிக்பிரிட் கோடல், தனது தந்தை மற்றும் நண்பர்களுடன் குமரி மாவட்டம் ராஜாவூருக்கு வந்தார். பின்னர், இரு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சூழ ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது மணமகன் மணமகளுக்கு தாலி செயின் அணிவித்தார்.
 
தனது காதலின் மலரும் நினைவுகள் குறித்து மணமகன் பேட்ரிக் சிக்பிரிட் கோடல் கூறியதாவது:- அனு விண்ணிமேரியுடன் பழகியதன் மூலம் எனக்கு இந்திய கலாசாரத்தின் மீதும், இந்திய குடும்ப வாழ்க்கை முறையின் மீதும் அதிக நாட்டம் ஏற்பட்டது. இதில் ஈர்க்கப்பட்ட எனக்கு அனு விண்ணிமேரி மீது காதல் மலர்ந்தது. எனது காதலையும், திருமணம் செய்ய விரும்புவதையும் அவரிடம் தெரிவித்தேன். அவரும் எனது காதலை ஏற்றுக்கொண்டதால் பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். இங்கு விருந்தில் வித விதமான உணவுகள் வைக்கப்பட்டது. பரோட்டா, பிரியாணியும் மிகவும் அருமையாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து, மாற்றம்: ஜூலை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து, மாற்றம்: ஜூலை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: திருநெல்வேலி–திருச்செந்தூர் வழித்தடத்தில் 6 நாட்கள் ரயில்கள் ரத்து!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: திருநெல்வேலி–திருச்செந்தூர் வழித்தடத்தில் 6 நாட்கள் ரயில்கள் ரத்து!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
Tamil Nadu Budget 2026: இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
Embed widget