Annamalai: கனவு உலகத்தில் காங்கிரஸ்.. இலவசம் என்று இல்லை, வளர்ச்சி என்று உள்ளது - அண்ணாமலை பேச்சு
பா.ஜ.க., தேர்தல் அறிக்கையில் வளர்ச்சி வளர்ச்சி என்று தான் இருந்துள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இலவசம் இலவசம் என்று தான் இருந்துள்ளது.
தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ என்ற பெருமைக்கு சொந்தக்காரரான முன்னாள் எம்.எல்.ஏ வேலாயுதன் (74 ) கடந்த மே மாதம் 8 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். 1996-ல் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்நிலையில் இன்று அவரது சொந்த ஊரான நாகர்கோவில் அருகே கருப்புக்கோடு பகுதியில் கட்டப்பட்ட மணிமண்டபத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”இன்று மோடி அரசு 3.0-இல் முதல் நதி பட்ஜெட் அறிவித்து சாதனையை படைத்துள்ளது. 10 ஆண்டுகள் போடப்பட்ட பட்ஜெட் முடிக்கப்பட்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு கொண்டு சென்றுள்ளது.
தனிநபர் வரி மாற்றியுள்ளதின் படி சகோதர, சகோதரிகளுக்கு பண சேமிப்பு புதிய அறிவிப்பின்படி நடக்கும். பெண்கள் குழந்தைகளுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமானது. ஒரு கோடி இளைஞர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் தலைசிறந்த கம்பெனிகளில் பணிபுரிய உள்ளனர். சென்னை உட்பட 14 பெரிய நகரங்களுக்கு சிறப்பு பட்ஜெட் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.
1 கோடி வீடுகள் நகர பகுதிகளில் உள்ள ஏழைகளுக்கு வர இருப்பதும் வரவேற்கத்தக்கது. மிக சிறப்பான பட்ஜெட் மோடி அரசு நமக்கு அளித்த உள்ளார்கள். அமராவதியில் புதிய நகரத்தை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதை புதிதாக கொண்டுவரப்பட்ட அமராவதியை மேம்படுத்துவதாக தான் கருகிறேன். இன்னும் இருதினங்களில் வேறு எந்தெந்த நகரம் என்பது தெரிய வரும்.
காங்கிரஸ் கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க., தேர்தல் அறிக்கையில் வளர்ச்சி வளர்ச்சி என்று தான் இருந்துள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இலவசம் இலவசம் என்று தான் இருந்துள்ளது. எங்களது பட்ஜெட் வளர்ச்சியை நோக்கியுள்ள தொடர்ச்சியான பட்ஜெட். கடந்த 3 ஆண்டுகளாக இருக்கும் பட்ஜெட் நீட்சியாக உள்ளது தற்போதைய பட்ஜெட்.
உச்ச நீதிமன்றம் நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டாம் என்று கூறியுள்ளது. தமிழகத்தில் எல்லா நகரங்களிலும் நீட் தேர்வை மாணவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அது மத்திய அரசின் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் பட்டியலில் இருந்து தெரிகிறது. நீட் தேர்வை மறு தேர்வு நடத்த வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் நேர்மையான அரசியல் நடைபெறவில்லை, இதனால் தினமும் போராட்டம் அதிகம். இளைஞர்கள் எல்லாம் பெரிய ஏக்கத்தோடு உள்ளார்கள். நாளைக்கே மாற்றம் வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். நவம்பர், டிசம்பரில் பா.ஜ.க., வில் இருக்கும் அனைத்து நிர்வாகிகளும் மாற்றப்படுவார்கள். இது எப்போதும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நடைமுறை” எனவும் தெரிவித்தார்.