மேலும் அறிய

சாத்தான்குளம் கொடூரம்: தாயை கொன்று சிறுமிகளை கடத்திய நபர் கைது - எங்கு உள்ளார்?

சாத்தான்குளத்தில் காதல் பெண் கொலை வழக்கில் கைதான நபர் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி: சாத்தான்குளம் பெண் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானபிரகாஷ் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முதலூர் பகுதியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (43) என்பவரது குடும்பத்தினருக்கும், சாத்தான்குளம் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஞானபிரகாஷ் என்பவருக்கும் இடையே, முத்துகிருஷ்ணனின் 15 வயது மகளுடன் ஞானபிரகாஷ் கொண்டிருந்த காதல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் ஞானபிரகாஷ் அடிக்கடி முத்துகிருஷ்ணன் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகத் தெரியவருகிறது.

பெண் உயிரிழப்பு

இந்நிலையில், நேற்று (22.10.2026) இரவு முத்துகிருஷ்ணனின் வீட்டிற்குச் சென்ற ஞானபிரகாஷ், அவர்களுடன் தகராறில் ஈடுபட்டு, முத்துகிருஷ்ணன், அவரது மனைவி மேரி விஜிலா (39) மற்றும் அவர்களது 12 வயது மகன் ஆகியோரை அரிவாளால் தாக்கியுள்ளார். இதில் மேரி விஜிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அங்கிருந்த இரண்டு சிறுமிகளையும் ஞானபிரகாஷ் தன்னுடன் அழைத்துச் சென்று தனது வீட்டில் வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை செய்தவர் கைது

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, காயமடைந்த முத்துக்கிருஷ்ணன் மற்றும் அவரது மகனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மேரி விஜிலாவின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ஞானபிரகாஷின் வீட்டில் இருந்த இரண்டு சிறுமிகளையும் காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஞானபிரகாஷைத் தேடி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், இதில் குற்றம் சாட்டப்பட்ட ஞானபிரகஷை தனிப்படை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே குடும்பத்தை குறிவைத்து தாக்குதல்? பெண் கொலை; இரு மகள்கள் கடத்தல் - அன்புமணி கண்டனம்
ஒரே குடும்பத்தை குறிவைத்து தாக்குதல்? பெண் கொலை; இரு மகள்கள் கடத்தல் - அன்புமணி கண்டனம்
தவெகவின் பெண்கள் பாதுகாப்பு வேஷம் கலைந்தது! - கனிமொழி ஆவேசம்
தவெகவின் பெண்கள் பாதுகாப்பு வேஷம் கலைந்தது! - கனிமொழி ஆவேசம்
தூத்துக்குடி: நாளை மறுநாள் மின்தடை; உங்கள் பகுதி உள்ளதா? விவரம் இதோ!
தூத்துக்குடி: நாளை மறுநாள் மின்தடை; உங்கள் பகுதி உள்ளதா? விவரம் இதோ!
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தனுஷ் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் ? அமைச்சர் மரிய வில்சன் ஓபன் டாக்
தனுஷ் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் ? அமைச்சர் மரிய வில்சன் ஓபன் டாக்
OTT Release: கொட்டும் மழை.. வீட்டில் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற படங்கள், சீரிஸ் - OTT-யில் இந்த வார புது ரிலீஸ் லிஸ்ட் இதோ
கொட்டும் மழை.. வீட்டில் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற படங்கள், சீரிஸ் - OTT-யில் இந்த வார புது ரிலீஸ் லிஸ்ட் இதோ
Vehicle Ban: நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு அனுமதி ரத்து - தலைநகருக்குள் நுழையவே முடியாது - ரூல்ஸ் என்ன?
நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு அனுமதி ரத்து - தலைநகருக்குள் நுழையவே முடியாது - ரூல்ஸ் என்ன?
NTK Karthika: ”சவால் விட்டீங்களே..” சிறைவாசலில் செய்தியாளர் கேள்வி - டென்ஷனான நாதக வேட்பாளர் கார்த்திகா
”சவால் விட்டீங்களே..” சிறைவாசலில் செய்தியாளர் கேள்வி - டென்ஷனான நாதக வேட்பாளர் கார்த்திகா
TN Weather News: விடாது கொட்டும் மழை - 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
விடாது கொட்டும் மழை - 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Tasmac: 3 நாட்கள் டாஸ்மாக்கிற்கு விடுமுறை..! எந்தெந்த தேதிகளில் தெரியுமா? காப்பீடு வழங்கி உத்தரவு
3 நாட்கள் டாஸ்மாக்கிற்கு விடுமுறை..! எந்தெந்த தேதிகளில் தெரியுமா? காப்பீடு வழங்கி உத்தரவு
ரூ.35k சம்பளத்தில் ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
ரூ.35k சம்பளத்தில் ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
டேங்கை நிரப்பினால் 414 கி.மீட்டர் மைலேஜ்... பக்கா மாஸ்! இளசுகளை இழுக்கும் Hero Xtreme 250R
டேங்கை நிரப்பினால் 414 கி.மீட்டர் மைலேஜ்... பக்கா மாஸ்! இளசுகளை இழுக்கும் Hero Xtreme 250R
Embed widget