மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

திருவாரூர் அருகே அரசு பேருந்து மரத்தின் மோதி விபத்து - காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதி

நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதுவது போல் வந்ததால், அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை இடது பக்கமாக திருப்பி உள்ளார். அப்போது பேருந்து விபத்துக்குள்ளானது.

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி இன்று காலை அரசு பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது திருவாரூர் அருகே காக்காகோட்டு என்ற இடத்தில் திருவாரூரில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதுவது போல் வந்ததால் அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை இடது பக்கமாக திருப்பி உள்ளார். அப்பொழுது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த நிலையில் பேருந்தில் முன் பக்கம் முழுவதுமாக சிதலம் அடைந்து பேருந்தில் பயணித்த 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதில் குவளைக்கால் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி, சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுமதி, கொல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெசிமா பர்வீன், கூத்தனூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி, மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த விமலா ராணி, கீழ மாங்குடியைச் சேர்ந்த ரேவதி, சீர்காழி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தனர்.

திருவாரூர் அருகே அரசு பேருந்து மரத்தின் மோதி விபத்து -  காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதி

மேலும், அரசு பேருந்து ஓட்டுநர் நெல்லிவளவநாதனுக்கு முகம் மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நன்னிலம் காவல்துறையினர் காயம்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப் ராஜ் நேரில் பார்வையிட்டு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிலையில் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக நன்னிலம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் அருகே அரசு பேருந்து மரத்தின் மோதி விபத்து -  காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதி

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் மற்றும் மன்னார்குடி ஆகிய இரண்டு அரசு போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. இந்த போக்குவரத்து பணிமனைகளில் இருந்து நாள்தோறும் அருகில் உள்ள வேளாங்கண்ணி திருச்சி தஞ்சை கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான பேருந்துகள் சென்று வருகின்றன. சமீப காலமாக அரசு பேருந்துகள் சரிவர பராமரிக்கப்படாத காரணத்தினால் அதிக அளவில் விபத்துக்கு உள்ளாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் அருகே கங்களாஞ்சேரி என்ற இடத்தில் அரசு பேருந்தில் படிக்கட்டு உடைந்து மாணவர்கள் காயம் அடைந்தனர். அதேபோன்று எண்கன் என்ற இடத்தில் அரசு பேருந்து டயர் கழன்று சென்று விபத்துக்குள்ளானது. இதேபோன்று தொடர்ந்து அரசு பேருந்துகள் விபத்துக்கு உள்ளாகி வருகிறது. ஆகவே அரசு பேருந்தை இயக்குவதற்கு முன்பாக பேருந்தை முழுமையாக பராமரித்து இயக்கினால் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்க வசதியாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
SBI SCO Recruitment 2024: ரூ.85 ஆயிரம் ஊதியம்; எஸ்பிஐயில் வங்கி வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
SBI SCO Recruitment 2024: ரூ.85 ஆயிரம் ஊதியம்; எஸ்பிஐயில் வங்கி வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget