மேலும் அறிய

கனமழை: இரண்டாவது முறை இடிந்த கமலாலயக் குளம் சுற்றுச்சுவர்!

நேற்று இரவு பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில் இரண்டாவது முறையாக திருவாரூர் நகராட்சிக்கு எதிர்புறமாக உள்ள கமலாலய குளத்தில் தென்கரை 100 மீட்டர் தூரம் முழுமையாக இடிந்து விழுந்துள்ளது.

கனமழையின் காரணமாக கமலாலயக் குளத்தின் சுற்றுச்சுவர் இரண்டாவது முறையாக 100 மீட்டர் இடிந்து விழுந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
திருவாரூரில் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலயக் குளம் உள்ளது. இந்தக் கோயிலில் ராஜராஜசோழன் வந்து வழிபட்டுச் சென்றதாக வரலாறு உள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோயில் ஐந்து வேலியும், குளம் ஐந்து வேலியும் என்ற சம நிலப்பரப்புடன் இந்த குளம் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த குளத்தின் தென்கரை, வடகரை, மேற்குக்கரை, உள்ளிட்ட நான்கு கரைகளிலும் இந்து சமய அறநிலை துறை சார்பில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்று கனமழையின் காரணமாக கமலாலயக் குளத்தின் வடகரையில் மேற்குக் கரையும் இடிந்து விழுந்தது. இதற்கு காரணம் இந்தப் பகுதியில் கனரக வாகனங்கள் செல்வதே என பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்தனர். அதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் இந்தப் பகுதிகளில் கனரக வாகனம் செல்வதற்கு அனுமதி மறுத்தது. அதன் பின்னர் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய சுற்று சுவர் கட்டப்பட்டது.

கனமழை: இரண்டாவது முறை இடிந்த கமலாலயக் குளம் சுற்றுச்சுவர்!
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 25ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக கமலாலயக் குளத்தின் தென்கரையில் 500 மீட்டர் தூரம் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது அதனையடுத்து சுற்று சுவர் இடிந்து விழுந்த இடத்தை இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனடியாக வந்து ஆய்வு செய்தனர் மேலும் புதியதாக சுற்றுச்சுவர் அமைக்க வல்லுநர்கள் கொண்ட குழு ஆய்வு செய்து தமிழ்நாடு முதலமைச்சரிடம் தெரிவித்து அதற்கான நிதி பெறப்பட்டு சுற்றுசுவர் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் தேவர் பாபி தெரிவித்திருந்தார்.  இந்த நிலையில் நேற்று இரவு பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில் இரண்டாவது முறையாக திருவாரூர் நகராட்சிக்கு எதிர்புறமாக உள்ள கமலாலய குளத்தில் தென்கரை 100 மீட்டர் தூரம் முழுமையாக இடிந்து விழுந்துள்ளது. அதுமட்டுமன்றி தென்கரையில் சாலைகள் முழுவதுமாக விரிசல் விடப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து காவலர்கள் பேரிகார்டு அமைத்து போக்குவரத்தை துண்டித்து உள்ளனர். 

கனமழை: இரண்டாவது முறை இடிந்த கமலாலயக் குளம் சுற்றுச்சுவர்!
மேலும் காலை முதல் தொடர்ந்து திருவாரூரில் மழை பெய்து வருவதால் மழையையும் பொருட்படுத்தாமல் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் நகராட்சி ஊழியர்கள் சுற்றுச் சுவரை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனையடுத்து தியாகராஜர் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா வந்த பொதுமக்கள் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த இடத்தில் குவிந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் சுற்றுச் சுவரை ஒட்டி உள்ள சாலைகள் முழுவதுமாக விரிசல் அடைந்து வருகின்றன இதனால் இந்த பகுதியில் எந்த நேரத்திலும் சுற்றுச் சுவர் முழுவதும் இடிந்து விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர் உடனடியாக மாவட்ட நிர்வாகம் புதிய சுற்றுச்சுவர் அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என திருவாரூர் மாவட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: 'இளைஞர்களுக்கு எதிரான குற்றம்'; மத்திய அரசை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி; எதற்கு தெரியுமா.?
'இளைஞர்களுக்கு எதிரான குற்றம்'; மத்திய அரசை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி; எதற்கு தெரியுமா.?
IPL 2026 SRH vs GT: முதல் அணியாக ப்ளே ஆஃப் செல்லப்போவது ஹைதரபாத்தா? குஜராத்தா? இதோ தொடங்கியது ஆட்டம்!
IPL 2026 SRH vs GT: முதல் அணியாக ப்ளே ஆஃப் செல்லப்போவது ஹைதரபாத்தா? குஜராத்தா? இதோ தொடங்கியது ஆட்டம்!
TN Power Shutdown: தஞ்சாவூரில் நாளை (13-05-2026) மின் தடை; எங்கெங்கே- முழு லிஸ்ட்!
TN Power Shutdown: தஞ்சாவூரில் நாளை (13-05-2026) மின் தடை; எங்கெங்கே- முழு லிஸ்ட்!
கோடை விடுமுறை ஸ்பெஷல் பஸ்கள் அறிவிப்பு - எந்தெந்த ஊர்களுக்கு எல்லாம் இயக்கம்? முழு விவரம் உள்ளே
கோடை விடுமுறை ஸ்பெஷல் பஸ்கள் அறிவிப்பு - எந்தெந்த ஊர்களுக்கு எல்லாம் இயக்கம்? முழு விவரம் உள்ளே
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

குடிபோதையில் 3 சிறுவர்கள் 17 வயது சிறுவன் கொடூரக் கொலை வீடியோ எடுத்த பகீர் சம்பவம்
ஆரம்பமே அதிரடி! 717 டாஸ்மாக் CLOSE! உத்தரவிட்டார் CM விஜய்
”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayachandran IAS : ’கட்டம் கட்டிய முதல்வர் விஜய்? காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் - பின்னணி என்ன?
‘காத்திருப்போர் பட்டியலில் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்’ பின்னணி என்ன?
Rahul Gandhi: 'இளைஞர்களுக்கு எதிரான குற்றம்'; மத்திய அரசை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி; எதற்கு தெரியுமா.?
'இளைஞர்களுக்கு எதிரான குற்றம்'; மத்திய அரசை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி; எதற்கு தெரியுமா.?
IPL 2026 SRH vs GT: முதல் அணியாக ப்ளே ஆஃப் செல்லப்போவது ஹைதரபாத்தா? குஜராத்தா? இதோ தொடங்கியது ஆட்டம்!
IPL 2026 SRH vs GT: முதல் அணியாக ப்ளே ஆஃப் செல்லப்போவது ஹைதரபாத்தா? குஜராத்தா? இதோ தொடங்கியது ஆட்டம்!
Thiruma: ‘’நூறாண்டானாலும் தமிழ்நாட்டில் தலித் முதலமைச்சர் ஆக முடியாது’’ திருமா வேதனை
Thiruma: ‘’நூறாண்டானாலும் தமிழ்நாட்டில் தலித் முதலமைச்சர் ஆக முடியாது’’ திருமா வேதனை
New Kia Sonet 2027: அதிக இடவசதி, சிறப்பான அம்சங்கள், ஒரு டீசல் எஞ்சின் தேர்வு - அசத்தலாக வரும் கியா சோனெட் 2027
அதிக இடவசதி, சிறப்பான அம்சங்கள், ஒரு டீசல் எஞ்சின் தேர்வு - அசத்தலாக வரும் கியா சோனெட் 2027
TTV Dhinakaran: தவெகவிற்கு டிடிவி தினகரன் மறைமுக ஆதரவா.? காமராஜை நீக்கியது நாடகமா.? ஓ.. இப்படி ஒரு ஐடியாவா.?
தவெகவிற்கு டிடிவி தினகரன் மறைமுக ஆதரவா.? காமராஜை நீக்கியது நாடகமா.? ஓ.. இப்படி ஒரு ஐடியாவா.?
’’கட்சிக்காரங்க யாரும் பேனர் வைக்கக்கூடாது.. மீறினா’’ தவெக கடும் எச்சரிக்கை!
’’கட்சிக்காரங்க யாரும் பேனர் வைக்கக்கூடாது.. மீறினா’’ தவெக கடும் எச்சரிக்கை!
’’நீட் தேர்வில் முறைகேடு இல்லை, தேர்வே முறைகேடுதான்; புதிய அரசுக்கு முக்கிய கோரிக்கை’’- ஸ்டாலின்
’’நீட் தேர்வில் முறைகேடு இல்லை, தேர்வே முறைகேடுதான்; புதிய அரசுக்கு முக்கிய கோரிக்கை’’- ஸ்டாலின்
Embed widget