மேலும் அறிய

திருத்துறைப்பூண்டியில் ரூ.2.95 கோடியில் புதிதாக தினசரி காய்கறி அங்காடி கட்டும் பணி தொடக்கம்

தினசரி காய்கறி அங்காடி கட்டிடம் சிறு உணவகம், கழிவறை, தானியங்கி வங்கி இயந்திரம் உள்ளிட்ட வசதிகளுடன் 44 கடைகள் கட்டும் பணி நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு நேரடி மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

திருத்துறைப்பூண்டியில் ரூ.2.95 கோடியில் புதிதாக தினசரி காய்கறி அங்காடி கட்டும் பணி தொடங்கியது.

அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் பகுதியில் நகராட்சி சார்பில் ரூ.2.95 கோடியில் புதிதாக தினசரி காய்கறி அங்காடி கட்டும் பணி தற்போதைய தீவிர நடவடிக்கையால் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்ட பிறகு பழைய பேருந்து நிலையம் காலியாக கிடந்தது. அதன் பிறகு பெரிய கோயில் வடக்கு வீதியில் கோயில் சுற்றுச்சுவர் ஓரமாக காய்கறி மார்க்கெட் 100 ஆண்டுகளாக இயங்கி வந்தது. அதன்பிறகு சுமார் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் 22 ஆண்டுகளாக காய்கறி மார்க்கெட் மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தில் கடந்த 2000 ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைத்து காய்கறி மார்க்கெட் துவங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் கட்டிடங்கள் சீரமைக்கப்படவில்லை அதன் காரணமாக கட்டிடம் பழுதடைந்துள்ளது. கட்டிடத்தில் மரம் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.

திருத்துறைப்பூண்டியில் ரூ.2.95 கோடியில் புதிதாக தினசரி காய்கறி அங்காடி கட்டும் பணி தொடக்கம்

இந்த காய்கறி மார்க்கெட்டிற்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இங்கே 38 கடைகளுக்கு மேல் இயங்கி வருகிறது. மேலும் கூடுதல் கடைகள் கட்டும் அளவுக்கு பின்புறம் போதிய இடமும் உள்ளது. ஆனால் சீரமைக்கப்படாததால் வளாகம் முழுவதும் புதர் மண்டி கட்டிடங்கள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் அடிக்கடி கட்டிடத்தின் மேற்குறை இடிந்து விழுந்து வருகிறது. ஆனால் சேதம் அடைந்த கட்டிடத்தில் காய்கறி கடை இயங்கி வருகிறது எனவே புதிதாக காய்கறி மார்க்கெட் கட்ட வேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

திருத்துறைப்பூண்டியில் ரூ.2.95 கோடியில் புதிதாக தினசரி காய்கறி அங்காடி கட்டும் பணி தொடக்கம்

இந்நிலையில் மீண்டும் திமுக ஆட்சி வந்து திருத்துறைப்பூண்டி நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் பதவி ஏற்றவுடன் புதிய காய்கறி மார்க்கெட் கட்டுவதற்கு நகராட்சி சார்பில் அரசு திட்டம் மதிப்பீடு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். அதன்படி திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டது. தமிழக அரசும் நிதி ஒதுக்கீடு செய்தது. இதனை அடுத்து திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் பகுதியில் இரண்டு கோடியே 95 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் பத்தாயிரம் சதுர அடி பரப்பளவில் தினசரி காய்கறி அங்காடி கட்டிடம் சிறு உணவகம் கழிவறை தானியங்கி வங்கி இயந்திரம் உள்ளிட்ட வசதிகளுடன் 44 கடைகள் கட்டும் பணி நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு நேரடி மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.  தீவிர நடவடிக்கையால் காய்கறி அங்காடி கட்டிடம் கட்டும் பணிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மீண்டும் கடந்த 10 ஆண்டுகளாக எந்த பணியும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் காய்கறி மார்க்கெட் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதற்கு திருத்துறைப்பூண்டி நகர் பகுதி மற்றும் திருத்துறைப்பூண்டி ஒன்றிய பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருத்துறைப்பூண்டி நகர மன்ற தலைவருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

பட்டியலின மக்களின் நலனுக்காக வசதிகள்.. பராமரிப்புக்கு திட்டம் உண்டா? அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
பட்டியலின மக்களின் நலனுக்காக வசதிகள்.. பராமரிப்புக்கு திட்டம் உண்டா? அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
மதுரை மீனாட்சி நவராத்திரி: ஊஞ்சல் அலங்காரத்தில் அம்மனின் அற்புத தரிசனம்!
மதுரை மீனாட்சி நவராத்திரி: ஊஞ்சல் அலங்காரத்தில் அம்மனின் அற்புத தரிசனம்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
Farmer subsidy: தமிழ்நாட்டில் 22 மாவட்ட பருத்தி விவசாயிகளுக்கு.. 100% மானியத்தில் உதவிகள்! என்னென்ன தெரியுமா?
Farmer subsidy: தமிழ்நாட்டில் 22 மாவட்ட பருத்தி விவசாயிகளுக்கு.. 100% மானியத்தில் உதவிகள்! என்னென்ன தெரியுமா?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget