மேலும் அறிய

பஞ்சப்பூர் இணைப்பு சாலை 3ம் கட்ட பணிகள் எப்போது தொடங்கும்: வெளியான அசத்தல் தகவல்

திருச்சி மாநகராட்சி, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த ஒருங்கிணைந்த பேருந்து முனைய (IBT) இணைப்பு சாலை திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளைத் தொடங்க ஆயத்தமாகி வருகிறது.

தஞ்சாவூர்: திருச்சியில் பஞ்சப்பூர் இணைப்பு சாலையின் மூன்றாம் கட்ட பணிகள் தொடங்க இருக்கிறது. இதற்காக விரைவில் டெண்டர் வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .இந்த பணிகள் நிறைவடைந்தால் போக்குவரத்து இடையூறுகள் குறையும். இது பயணிகளுக்கு நேரத்தையும், வாகன ஓட்டுனர்களுக்கு எரிபொருளையும் மிச்சப்படுத்தும். இந்தத் திட்டத்தின் வெற்றி, திருச்சி மாநகரத்தின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். 

திருச்சி மாநகராட்சி, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த ஒருங்கிணைந்த பேருந்து முனைய (IBT) இணைப்பு சாலை திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளைத் தொடங்க ஆயத்தமாகி வருகிறது. இதற்கான டெண்டர் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிகள் நிறைவடைந்தால் திருச்சி மாநகர வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

பஞ்சப்பூரில் உள்ள கொரையாறு மற்றும் குடமுருட்டி ஆற்றின் வலது கரையில் இருந்து இந்த IBT இணைப்பு சாலை மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டம், பஞ்சப்பூரை கருமண்டபத்துடன் (2 கி.மீ) இணைக்கிறது. இரண்டாம் கட்டம், அரியலூர் முதல் குடமுருட்டி சோதனைச் சாவடி வரை (2.1 கி.மீ) செல்கிறது. மூன்றாம் கட்டம், கருமண்டபத்திற்கும் அரியலூருக்கும் இடையே (5.7 கி.மீ) அமைகிறது. முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் மேம்பால சாலைகள் உட்பட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், நிலம் கையகப்படுத்தும் பணி தேவைப்பட்ட மூன்றாம் கட்டப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் "ஜனவரி 2026-ல் மூன்றாம் கட்டத்திற்கான டெண்டர் வெளியிடப்படும். 2026-ல் இணைப்பு சாலையின் ஒரு பகுதியை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என்று திருச்சி மேயர் தெரிவித்துள்ளார். முதல் மற்றும் இரண்டாம் கட்டப் பணிகள், உள்ளூர் நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர் இருவரும் ஒரே வேகத்தில் செயல்பட்டால், அக்டோபர் 2026-க்குள் போக்குவரத்துக்கு திறக்கப்பட வாய்ப்புள்ளது.

நிலம் கையகப்படுத்தும் தேவையை 4 ஏக்கரில் இருந்து 1 ஏக்கராகக் குறைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இணைப்பு சாலையின் சுமார் 60% பகுதிகள் மேம்பாலங்களாக அமைக்கப்பட உள்ளன. இதனால், நிலத் தேவையும் குறையும், மேலும் இருவழிப் போக்குவரத்தும் சீராக நடைபெறும். இருப்பினும், கனரக வாகனங்களுக்கு இதில் அனுமதி இல்லை. இணைப்பு சாலையின் மொத்த அகலம் 9.5 முதல் 12.5 மீட்டர் வரை இருக்கும். மேம்பாலங்களில் இருந்து சாலைக்கு வருவதற்கு 5-6 மீட்டர் அகலத்திற்கு சேவை சாலைகளும், இரண்டு ரயில்வே மேம்பாலங்களும் (RoBs) அமைக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம், திருச்சி நகரின் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும், பேருந்து முனையத்திற்குச் செல்வது எளிதாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நகரின் மையப் பகுதிகளுக்கும், புறநகர்ப் பகுதிகளுக்கும் இடையே இணைப்பு வலுப்பெறும். மேம்பாலங்கள் அமைப்பதால், சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகள் குறையும். திருச்சி மாநகரத்தின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் மாவட்ட இல்லத்தரசிகள் அதிர்ச்சி... ஒரே மாதத்தில் கடலைப் பருப்பு கிலோவுக்கு ரூ.30 அதிகரிப்பு
தஞ்சாவூர் மாவட்ட இல்லத்தரசிகள் அதிர்ச்சி... ஒரே மாதத்தில் கடலைப் பருப்பு கிலோவுக்கு ரூ.30 அதிகரிப்பு
விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்: மல்லிப்பட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்: மல்லிப்பட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாகப் புகார்! தஞ்சாவூர் காவல் ஆய்வாளர் கைது; அக்.23 வரை நீதிமன்றக் காவல்!
ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாகப் புகார்! தஞ்சாவூர் காவல் ஆய்வாளர் கைது; அக்.23 வரை நீதிமன்றக் காவல்!
தஞ்சாவூர் மாநகராட்சி அதிரடி... பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய பன்றிகள் பிடிப்பு
தஞ்சாவூர் மாநகராட்சி அதிரடி... பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய பன்றிகள் பிடிப்பு

வீடியோ

அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
Embed widget