செருபாலக்காடு அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் 41 பேருக்கு எவர்சில்வர் வாட்டர் பாட்டில், அங்கன்வாடி குழந்தைகள் 13 பேருக்கு கலர் பென்சில், வரைபடம் ஆகியவை வழங்கப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் செருபாலக்காடு அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள, செருபாலக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திமுக இளைஞர் அணிச்செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.ஞானப்பிரகாசம் தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் 41 பேருக்கு எவர்சில்வர் வாட்டர் பாட்டில், அங்கன்வாடி குழந்தைகள் 13 பேருக்கு கலர் பென்சில், வரைபடம் ஆகியவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியில், சேதுபாவாசத்திரம் முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் இரா.இராசரெத்தினம், சேதுபாவாசத்திரம் மேற்கு திமுக ஒன்றியச் செயலாளர் குழ.செ.அருள்நம்பி, முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் கட்டையங்காடு மணிமுத்து, ருக்மணி மணியன், முனியாண்டி, ஆசிரியைகள் சுபாஷினி, ரஞ்சிதா மற்றும் கிராமத்தினர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.சங்கீதா வரவேற்றார். 5ம் வகுப்பு மாணவி பா.பாலஜனனி நன்றி கூறினார்.
ரூ.52 லட்சத்தில் வளர்ச்சிப்பணிகள் தொடக்கம்
பேராவூரணி தொகுதியில் ரூ.52 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், அம்மையாண்டி ஊராட்சி, வீரராகவபுரம் - சாணாகரை இணைப்புச் சாலை ரூ.23.80 லட்சம் மதிப்பீட்டிலும், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், விளங்குளம் ஊராட்சி, மாருதிப்பட்டினம் முஸ்லிம் தெருவில் ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை, ருத்திரசிந்தாமணி ஊராட்சி பழுக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர்.
மரக்காவலசை ஊராட்சி, துறையூர் கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை என, மொத்தம் ரூ.52.30 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு மற்றும் துவக்க விழா நடைபெற்றது.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார். பேராவூரணி, சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலியபெருமாள், செல்வேந்திரன், மனோகரன், நாகேந்திரன், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் திமுக ஒன்றியச் செயலாளர்கள், ஒன்றியப் பொறியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், முன்னாள், இன்னாள் மக்கள் பிரதிநிதிகள், கிராம பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





















