மேலும் அறிய
Advertisement
கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட தயாராகும் வேளாங்கண்ணி பேராலயம்
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன
வங்கக் கடலோரத்தில், பண்பாடு, மொழி, சமயங்களால் வேறுபட்டிருக்கும் மக்கள் சங்கமிக்கும் இடமாகவும், உலக பிரசித்திப் பெற்ற ஆன்மிக, சுற்றுலா தலமாக விளங்குகிறது வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா தேவாலயம். கிறிஸ்தவர்களின் புனிததலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் பண்டிகை இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன் வரும் 25 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதில் இயேசு கிறிஸ்து பிறப்பினை நினைவுபடுத்தும் விதமாக குடிசையில் ஏசுபிரான் குழந்தையாக பிறந்ததை பிரம்மாண்ட குடில் அமைத்து ஏசுவின் பிறப்பின் காட்சிகள் அரங்கேற்றம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
கிறிஸ்மஸ் அன்று சமூக இடைவெளியை பின்பற்றி சிறப்பு திருப்பலி பிரார்த்தனைகள் நடைபெறும். இயேசு கிறிஸ்து பிறப்பை நினைவு கூறும் விதமாக பிறந்தநாள் பாடல் பாடப்பட்டு வாழ்துக்களை பரிமாறிக் கொள்வார்கள் . பின்னர் வேதாகம பாடங்கள் வாசித்து திருப்பலி தொடர்ந்து நடைபெற்றும். திருப்பலியில் திவ்யநற்கருணை ஆசிரும் நடைபெற்று பேராலயத்தில் கிறிஸ்மஸ் சிறப்பு பிரார்தனை தமிழ், இந்தி, மலையாளம், கொங்கனி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடைபெறும். கிறிஸ்மஸ் விழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை புரிய உள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உதவிக்கரங்கள் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் அன்புதான் கடவுள் என்ற தன்னார்வலர்கள் சார்பில் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இயேசு கிறிஸ்து மகிமை மற்றும் அவர் பிறப்பு குறித்து மாணவர்களுக்கு விவரித்தார். இதில் கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் குடில் அமைக்கப்பட்டு, கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடப்பட்டன தொடர்ந்து பள்ளி மாணவிகள் கிறிஸ்துமஸ் தாத்தா முக கவசம் அணிந்து ஆடல் பாடலுடன் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து கிறிஸ்மஸ் கேக் வெட்டப்பட்டு ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு அன்பை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியின்போது ஆதரவற்ற குழந்தைகளுக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திரளான பார்வையாளர்கள் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion