மேலும் அறிய
Advertisement
பழைய குருடி கதவை திறடி என்பதை போல் மத்திய அரசுடன் திமுக இணக்கம் - டிடிவி குற்றச்சாட்டு
சிலர் ஆட்சிப் பொறுப்பில் அமர வேண்டும் என்பதற்காக சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் போல் கட்டிக்கொண்டு இன்று ஆட்சியில் அமர்ந்த பின் அவர்களின் செயல்பாடுகள் மக்களுக்கு தெரியும்
உள்ளாட்சி தேர்தலில் அமமுக - அதிமுக இணைப்பு இல்லை: எதிர்க்கட்சியாக இருந்தவர்கள், ஆளுங்கட்சியாக வந்தால் பழைய குருடி கதவை திறடி என்பது போல் தாங்கள் கூறியதை மறந்துவிட்டு மத்திய அரசுக்கு இணக்கமாக செல்கின்றனர் என அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கை நல்லூரில் உள்ள தனியார் விடுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சிறுபான்மையினர் பிரிவு சார்பில் ஐக்கிய கிறிஸ்துமஸ் பெருவிழா துணைப் பொதுச் செயலாளர் கிங்ஸ்லி ஜெரால்ட் தலைமையில் நடைபெற்றது. பூர்ணகும்ப வரவேற்புடன் தொடங்கிய விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கலந்து கொண்டு கிறிஸ்மஸ் கேக் வெட்டி கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து பாதிரியார்கள் வழங்கிய குழந்தை இயேசுவை டிடிவி தினகரனிடம் குடிலில் வைத்தார் அப்போது கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்த ஒருவருடன் குழந்தைகள் ஆடிப்பாடி மகிழ்ந்த கடையில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் பங்கு தந்தைகள், அமமுக துணை பொது செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட செயலாளர் மஞ்சுளா சந்திரமோகன் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய டிடிவி தினகரன் மதம் இனம் ஜாதியின் பெயரால் அமைதி பூங்காவாக உள்ள நமது மாநிலத்தை நமது நாட்டை அரசியல் காரணங்களுக்காக ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்பதற்காக பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளதாகவும், சிலர் ஆட்சிப் பொறுப்பில் அமர வேண்டும் என்பதற்காக சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் போல் கட்டிக்கொண்டு இன்று ஆட்சியில் அமர்ந்த பின் அவர்களின் செயல்பாடுகள் மக்களுக்கு தெரியும் என்றார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய டிடிவி தினகரன், கொடநாடு கொலை வழக்கு குறித்து, விவேக்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவது அவரிடம் தகவல்கள் ஏதாவது இருக்கலாம் என்பதால் விசாரணை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்துகின்றனர். இதை ஒன்றும் நாம் வித்தியாசமாக பார்க்க தேவையில்லை என்றார். மேலும் தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும், எதிர்க்கட்சியாக இருக்கிறவர்கள் தாண்டி குதிக்கிறார்கள். அதேபோல் எதிர்க்கட்சியாக இருந்தவர்கள், ஆளுங்கட்சியாக வந்தால் பழைய குருடி கதவை திறடி என்பது போல் தாங்கள் கூறியதை மறந்துவிட்டு மத்திய அரசுக்கு இணக்கமாக செல்கின்றனர். இதை தான் எதிர்கட்சியாக இருக்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தற்போது செய்கிறார். மாறி, மாறி குறை கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். அவர்கள் மாற மாட்டார்கள். மக்கள் தான் இதற்கான மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றார்.
மேலும் வருகின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அமமுக - அதிமுக இணைப்பு உண்டா என்ற கேள்விக்கு இல்லை என்று டிடிவி தினகரன் தலையாட்டி பதிலளித்தார். முன்னதாக நாகை மாவட்டம் வந்தடைந்த டிடிவி தினகரனுக்கு அக்கட்சியினர் சாலை முழுவதும் மின் விளக்குகள் அனைத்தும் வாணவேடிக்கையுடன் இசை நிகழ்ச்சியோடு வரவேற்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion