TN 12th Result 2025: அவசரப்பட்டுட்டியே மா... நேற்று தற்கொலை-இன்று தேர்ச்சி, எவ்வளவு மார்க் தெரியுமா?
TN 12th Result 2025: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் பிளஸ் டூ ரிசல்ட் இல் தான் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையமாட்டோம் என்று தற்கொலை செய்துக்கொண்ட மாணவி தேர்ச்சி அடைந்தது அவரது பெற்றோரை சோகத்தில் தள்ளியுள்ளது.
12 ஆம் பொதுத்தேர்வு:
2024-2025 நிதியாண்டுக்கான 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினர். மார்ச் 3ஆம் தேதி முதல் 25 வரை தேர்வு நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்டல் .4ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில் ஒருநாள் முன்கூட்டியே 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது. மொத்த தேர்ச்சி விகிதம் 95.03% ஆக உள்ளது.
தஞ்சை மாணவி:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், படுகை புதுத் தெருவை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. விவசாயியான இவரது மகள் ஆர்த்திகா (17) பாபநாசத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 தேர்வு எழுதி ரிசல்டுக்காக காத்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று (08.05.25) மகளை காணாத அவரது பெற்றோர் வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகைக்கு சென்று பார்த்தபோது ஆர்த்திகா துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர், அவர்கள் ஆர்த்திகாவை பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆர்த்திகா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பாபநாசம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணைக்கு பிறகு இன்று +2 ரிசல்ட் வெளியாவதையொட்டி, எங்கே தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தான் அங்கிருந்த துப்பட்டாவில் மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.
நேற்று மரணம்.. இன்று தேர்ச்சி:
நேற்று தற்கொலை செய்து கொண்ட மாணவி ஆர்த்திகாவின் தேர்வு முடிவை பார்த்த போது அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். தமிழ்- 72, ஆங்கிலம்- 48, இயற்பியல் 65, வேதியியல்-78, தாவரவியல் 70, விலங்கியல் - 80 மொத்தம் 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்தப் தேர்வு முடிவை பார்த்ததும் உயிரை விட்ட மாணவியின் ஒட்டுமொத்த குடும்பமும் கண்ணீர் விட்டு அழுதது பார்ப்பவர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)























