மேலும் அறிய
விபத்தில் காயம் அடைந்தவர்களை தனது காரில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்த திருவாரூர் எம்எல்ஏ
டிராக்டர் மோதி ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் காயம் அடைந்தவர்களை தனது காரில் ஏற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்.

திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட அத்திகடை பகுதியை சேர்ந்தவர்கள் மும்தாஜ் பேகம் வயது 70 மற்றும் அவரது பேரன்கள் இரட்டையர்கள் பாசில் வயது 11, பையாஸ் வயது 11 . இவர்கள் புலிவலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு ராஜ்முகமது என்பவரின் ஆட்டோவில் வந்துவிட்டு இரவு அத்திகடை செல்லும் வழியில் திருவாரூரிலிருந்து மன்னார்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காட்டாத்துபாலம் என்கிற இடத்தில் எதிரே வந்த டிராக்டர் மோதி இவர்கள் பயணித்த ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோவில் பயணித்த மும்தாஜ் பாசில் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் மன்னார்குடியிலிருந்து தனது காரில் திருவாரூர் நோக்கி வந்து கொண்டிருந்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் இந்த விபத்தை பார்த்த உடன் அவரச ஊர்திக்காக காத்திருக்காமல் தனது காரில் நான்கு பேரையும் ஏற்றி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவந்துள்ளார்.

மேலும் அவரே காயம் பட்டவர்களுடன் இருந்து அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மேலும் விபத்து குறித்து திருவாரூர் தாலுகா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக தனது காரில் ஏற்றி அரசு மருத்துவமனையில் அனுமதித்த திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி கலைவானனை இப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
கல்வி
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion