மேலும் அறிய

பேருந்து மோதி தந்தை, மகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு- மயிலாடுதுறையில் சோகம்

மயிலாடுதுறையில் சாலை விபத்தில் அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி  தந்தை, மகள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மயிலாடுதுறை ஐயாரப்பர் தெற்கு வீதியை சேர்ந்தவர் 38 வயதான குமரவேல். கூலிதொழில் செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை சேண்டிருப்பு பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு மயிலாடுதுறைக்கு திரும்பியுள்ளார். குமரவேலின் மனைவி மற்றும்  உறவினர்கள் ஆட்டோவில் சென்றுள்ளனர்.


பேருந்து மோதி தந்தை, மகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு- மயிலாடுதுறையில் சோகம்

அவர்களுக்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் குமரவேல் மற்றும் அவரது 3 வயது குழந்தை சாய் சக்தி மற்றும் தம்பி மகன் 16 வயதான நித்திஷ் குமார் ஆகிய மூன்று பேரும் வந்துள்ளனர். அப்போது சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் மேலே மூவரும் சென்று கொண்டிருந்தபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் பேருந்தை முந்தி சென்றபோது  எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார்‌. இதில் குமரவேல் குழந்தைகளுடன் நிலை தடுமாறி மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பேருந்தின் மீது மோதி பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கியதில் குழந்தை சாய் சக்தி, மற்றும் அவரது தந்தை குமரவேல் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


பேருந்து மோதி தந்தை, மகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு- மயிலாடுதுறையில் சோகம்

இதில் குமரவேலுவின் தம்பி மகனான 16 வயது நிதிஷ்குமார் தலையில் பலத்த காயம் அடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியில் நிதிஷ்குமாரும் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மூன்று பேரின் உடல்களும் உடல்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. பேருந்தினை ஓட்டி வந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், விபத்து காரணம் குறித்து மயிலாடுதுறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பேருந்து மோதி தந்தை, மகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு- மயிலாடுதுறையில் சோகம்

வாகனங்களில் செல்லும்போது வேகத்தை காட்டிலும் விவேகத்துடன் கவனமாக செல்ல வேண்டும் என்றும், முறையாக தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பட்சத்தில் பெரும் விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தவிர்க்கலாம் எனவும், இந்த விபத்தில் கண்மூடித்தனமாக போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டு பேருந்தை முந்தி செல்ல முயன்ற ஒருவரால் மயிலாடுதுறையில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும், இதனால் மக்கள் அனைவரும் சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
பேரிடர் வந்தாலும் பதறாதீங்க மாணவாஸ்... என்ன செய்யணும்? செய்முறை பயிற்சி நிறைவு
பேரிடர் வந்தாலும் பதறாதீங்க மாணவாஸ்... என்ன செய்யணும்? செய்முறை பயிற்சி நிறைவு
பாடாலூரில் பரபரப்பு: பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்: போலீசார் தீவிர விசாரணை
பாடாலூரில் பரபரப்பு: பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்: போலீசார் தீவிர விசாரணை

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
CJP Protest: மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
PM Modi: நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
JanaNayagan Collection: விஜயின் ஜனநாயகன் பாக்ஸ் ஆஃபிஸில் தெறித்ததா? முதல் நாள் வசூல் எவ்வளவு? எத்தனை கோடிகள்?
விஜயின் ஜனநாயகன் பாக்ஸ் ஆஃபிஸில் தெறித்ததா? முதல் நாள் வசூல் எவ்வளவு? எத்தனை கோடிகள்?
Kia Syros EV: குட்டி மின்சார பீஸ்டை இறக்கிய கியா..! 526KM ரேஞ்சுக்கு இந்த விலை ஓகேவா? அம்சங்கள், வசதிகள்
Kia Syros EV: குட்டி மின்சார பீஸ்டை இறக்கிய கியா..! 526KM ரேஞ்சுக்கு இந்த விலை ஓகேவா? அம்சங்கள், வசதிகள்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
Embed widget