மேலும் அறிய

திருவாரூர்: சடலத்தை விவசாய நிலத்தில் தூக்கி செல்லும் அவலம் - பாதை அமைத்து தர அரசுக்கு கோரிக்கை

’’உடனடியாக இப்பிரச்னையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தீர்வுகான ஆப்பரக்குடி மக்கள் கோரிக்கை’’

திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் ஆப்ரகுடி கிராமம் உள்ளது. திருவாரூர் மாவட்டம் ஆப்பரக்குடி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆதியன் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர்.  இந்த மக்களுக்கான மயானம் ஆனது ஆப்பரக்குடியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக வயல் வெளிகளுக்கு நடுவே உள்ளது. இந்நிலையில் ஊரில் யாரேனும் உயிரிழந்தால் அப்பகுதி மக்கள் இறந்தவர்களை நினைத்து துயர படுகிறார்களோ இல்லையோ இந்த சடலத்தை மயானத்துக்கு தூக்கிச் செல்ல நாம் என்ன பாடு பட வேண்டும் என்ற கவலை தொற்றிக்கொள்ளும் நிலை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. அந்த அளவுக்கு பயணத்துக்கான பாதை இல்லாமல் ஆப்பரக்குடி மக்கள் பெருந்துன்பம் பட்டு வருகின்றனர்

திருவாரூர்: சடலத்தை விவசாய நிலத்தில் தூக்கி செல்லும் அவலம் - பாதை அமைத்து தர அரசுக்கு கோரிக்கை
இந்த கிராமத்தில் யாரேனும் உயிரிழந்தால் அவரது பிரேதத்தை வயல் வழியாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்துச் செல்கின்றனர். அப்பொழுது பிரேதம் பலமுறை வயலில் விழுந்தும் அல்லது வயல்களுக்கு நடுவில் உள்ள வாய்க்காலில் விழுந்தும் பல சிரமங்களை தாண்டி தான் மயானத்துக்கு செல்ல வேண்டி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இன்று அப்பகுதியை சேர்ந்தவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் அவரது  உடலை தூக்கி கொண்டு  சென்ற இறுதி ஊர்வலமானது  விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் பாடுபட்டு வளர்த்த சம்பா பயிரின் நடுவே சென்றது. சடலத்தை தூக்கி சென்ற பலரும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் என்பதால் உயிரிழந்தவர்களுக்காக வருந்துவதா ? அல்லது தாங்கள் வளர்த்த பயிர்கள் காலில் மிதிபட்டு சாவதைக் கண்டு வருந்துவதா? என மனம் வருந்திக்கொண்டே கலக்கத்துடன் விளைநிலங்களில் இறங்கி இடுகாட்டிற்கு சென்றனர்.

திருவாரூர்: சடலத்தை விவசாய நிலத்தில் தூக்கி செல்லும் அவலம் - பாதை அமைத்து தர அரசுக்கு கோரிக்கை

இந்த பகுதியில் வசிக்கும் ஆதி திராவிடர் மக்கள் யாரேனும் உயிரிழந்தால் இடுகாட்டிற்கு உயிரிழந்தவரின் உடலை எடுத்துச் செல்ல சாலை வசதி இல்லாத காரணத்தினால் தொடர்ந்து சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேநேரத்தில் அவர்கள் தற்போது உயிரிழந்தவர்களின் சடலத்தை எடுத்துச் செல்லும் வழி பிற்படுத்தப்பட்டோர் மக்களின் நிலமாக உள்ளது அவர்கள் அந்த இடத்தில் சாலை அமைக்க அனுமதி தர மறுக்கிறார்கள் என தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள  மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

உடனடியாக மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி 50 வருடமாக சாலை வசதி இல்லாமல் இருக்கும் மக்களுக்கு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தோம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். உடனடியாக மயானத்துக்கு  செல்வதற்கு உரிய பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
Sabarimala Temple: சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Embed widget