மேலும் அறிய

திருவாரூரில் நள்ளிரவு முதல் கனமழை..... தற்போது மிதமான மழை..!

வேளாண் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியாக சென்று ஆய்வு செய்து மழை நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள காரணத்தினால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 10 தேர்தலுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இன்று வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் இன்றும்  நாளையும் திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இரண்டு மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டு வந்த நிலையில் நள்ளிரவு முதல் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு மாவட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது குறிப்பாக திருவாரூர், கூத்தாநல்லூர், கொரடாச்சேரி, நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி,  குடவாசல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை என்பது பெய்ய தொடங்கியது. அதிகபட்சமாக குடவாசலில் 47 மில்லி மீட்டர் மழை அளவும் மன்னார்குடியில் 45 மில்லி மீட்டர் மழை அளவும் திருவாரூரில் 40 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவாகியுள்ளது.குறைந்தபட்ச மழை அளவாக முத்துப்பேட்டையில் ஐந்து மில்லி மீட்டர் மழை என்பது பதிவாகியுள்ளது. 

திருவாரூரில் நள்ளிரவு முதல் கனமழை..... தற்போது மிதமான மழை..!

தற்போது இந்த மழை என்பது மிதமான மழையாக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே கடந்த ஒரு வாரம் பெய்த கனமழையின் காரணமாக ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள தாளடி நெற்பயிர்கள் 10,000 ஏக்கர் பரப்பளவில் விதைத்து 20 நாட்களாக நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிப்படைந்தது. அதனை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக மழை விட்டிருந்த நிலையில் சம்பா மற்றும் தாலடி நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாய நிலங்களில் தேங்கியிருந்த மழை நீரை அந்தந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஜேசிபி எந்திரம் மண்வெட்டி உள்ளிட்ட இயந்திரங்களைக் கொண்டு மழை நீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மீண்டும் தற்போது கனமழை என்பது தொடர்ந்து வருவதால் பாதிப்பு என்பது அதிகரிக்க கூடும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். உடனடியாக வேளாண் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியாக சென்று ஆய்வு செய்து மழை நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

திருவாரூரில் நள்ளிரவு முதல் கனமழை..... தற்போது மிதமான மழை..!

அதுமட்டும் இன்றி பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் இதுகுறித்து கூறுகையில், “ஏற்கனவே குறுவை அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தாழ்வான பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் மழைநீர் சூழ்ந்து இருந்தால் அதனை வடிய வைப்பதற்கான நடவடிக்கை அரசு அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் தற்பொழுது மிதமான மழை பெய்து வருவதால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Thanjavur District power cut 7.7.26: சார்ஜர் தேடுறவங்க இப்பவே தேடுங்க, தண்ணீர் டேங்கையும் நிரப்பிடுங்க: மிக்ஸி, டிவி நாளை ஒரு நாள் 'ஹாலிடே மோடு'!
Thanjavur District power cut 7.7.26: சார்ஜர் தேடுறவங்க இப்பவே தேடுங்க, தண்ணீர் டேங்கையும் நிரப்பிடுங்க: மிக்ஸி, டிவி நாளை ஒரு நாள் 'ஹாலிடே மோடு'!
ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த தீ! நரகமாக மாறிய குடியிருப்பு பகுதிகள்
ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த தீ! நரகமாக மாறிய குடியிருப்பு பகுதிகள்
கும்பகோணத்தில் 44 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கல்: அமைச்சர் வினோத்ரவி பெருமிதம்
கும்பகோணத்தில் 44 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கல்: அமைச்சர் வினோத்ரவி பெருமிதம்
கருகும் குறுவை கனவுகள்! சான்றிதழ் தர மறுக்கும் விஏஓக்கள்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதறிய விவசாயிகள்
கருகும் குறுவை கனவுகள்! சான்றிதழ் தர மறுக்கும் விஏஓக்கள்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதறிய விவசாயிகள்

வீடியோ

Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
’வாரியத் தலைவர் பதவியை பெறுவதில் போட்டா, போட்டி’ காங்கிரஸ் 2, விசிக 1 ?
’வாரியத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி’ காங்கிரஸ் 2, விசிக 1 ?
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
E.V.Velu Asset : ‘திமுக குடும்பத்தின் கஜானா – ஏவ வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
'ஏ.வ.வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
Embed widget