மேலும் அறிய

திருவாரூரில் 2 நாட்களாக தொடர் மழை - 10,000 ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

பருத்தி பயிரிடப்பட்டு 40 நாட்கள் ஆன நிலையில் இலை வைத்து நன்றாக வளர்ந்து வந்த நிலையில் எதிர்பாராவிதமாக பெய்த கனமழையின் காரணமாக பருத்தி வயலில் முழுவதுமாக மழைநீர் தேங்கியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் நேற்று காலை முதல் கனமழை பெய்தது. இந்த திடீர் கனமழையின் காரணமாக கோடை சாகுபடியான பருத்தி, உளுந்து பயிர், எள், நிலக்கடலை, உள்ளிட்ட சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு 40 ஆயிரத்து 695 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்பொழுது பருத்தி பயிரிடப்பட்டு 40 நாட்கள் ஆன நிலையில் இலை வைத்து நன்றாக வளர்ந்து வந்த நிலையில் எதிர்பாராவிதமாக பெய்த கனமழையின் காரணமாக பருத்தி வயலில் முழுவதுமாக மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பருத்தி அழுக கூடிய நிலை உருவாகி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 

திருவாரூரில் 2 நாட்களாக தொடர் மழை - 10,000 ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

குறிப்பாக திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டை, கமலாபுரம், வடபாதிமங்கலம், ராயநல்லூர் திருத்துறைப்பூண்டி வலங்கைமான் ஆலத்தம்பாடி சேந்தங்குடி புள்ளமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உளுந்து பயிர் சாகுபடி ஏப்ரல் மாதத்தில் பெய்த கனமழையின் காரணமாக முற்றிலும் பாதிக்கப்பட்டது இதனால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன அதுமட்டுமன்றி அறுவடை நேரத்தில் சம்பா நெல் பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் செலவு செய்த பணத்தை எடுக்க முடியாமல் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பை சந்தித்திருந்தனர்

திருவாரூரில் 2 நாட்களாக தொடர் மழை - 10,000 ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

இதனிடையில் பணப் பயிரான பருத்தி சாகுபடி விவசாயிகளுக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில் தற்பொழுது பெய்த கனமழையின் காரணமாக பருத்தி சாகுபடி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது ஒரு ஏக்கருக்கு இதுவரை பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் செலவு செய்த பணம் அனைத்தும் கைக்கு கிடைக்காத நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மழை தொடர்ந்தால் ஒட்டு மொத்த பருத்தி சாகுபடியும் பாதிக்கும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். பருத்தி சாகுபடியில் தற்பொழுது பூ வைக்கும் நேரத்தில் இந்த மழை பெய்து வருவதால் பருத்தி பயிர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட இடங்களை வேளாண் துறை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் இல்லை என்றால் அடுத்த கட்ட விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கணிதமேதை ராமானுஜர் வாழ்ந்த இல்லம்! கும்பகோணத்தில் ஒரு பொக்கிஷம்!
கணிதமேதை ராமானுஜர் வாழ்ந்த இல்லம்! கும்பகோணத்தில் ஒரு பொக்கிஷம்!
வீடு புகுந்து தங்கச் செயின் பறிப்பு; தடுக்க முயன்றவருக்கு நேர்ந்த கதி? தஞ்சையில் பரபரப்பு
வீடு புகுந்து தங்கச் செயின் பறிப்பு; தடுக்க முயன்றவருக்கு நேர்ந்த கதி? தஞ்சையில் பரபரப்பு
கிடங்குகள் நோக்கி நகர்ந்த 27 லட்சம் சாக்குகள்… தஞ்சையில் லாரிகள் பரபரப்பாக இயங்கிய தருணம்!
கிடங்குகள் நோக்கி நகர்ந்த 27 லட்சம் சாக்குகள்… தஞ்சையில் லாரிகள் பரபரப்பாக இயங்கிய தருணம்!
வெப்பமும் குறட்டை நோயும்... மாடு வளர்ப்போருக்கு இரட்டைச் சவால்: தீர்வு என்ன?
வெப்பமும் குறட்டை நோயும்... மாடு வளர்ப்போருக்கு இரட்டைச் சவால்: தீர்வு என்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Delhi Bus Gang Rape|டெல்லியில் மீண்டும் நிர்பயா! பேருந்தில் நேர்ந்த கொடூரம் கூட்டு பாலியல் வன்கொடுமை
வெள்ளை அறிக்கை விரைவில்!ஆட்டத்தை தொடங்கிய விஜய்பதற்றத்தில் திமுக
சுக்குநூறான அதிமுக? EPS vs SP வேலுமணி! முற்றும் மோதல்
MA Siddique IAS | நிதித்துறை 'சிங்கம்'விஜய்யின் LIFESAVER..யார் இந்த சித்திக் IAS?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காங்கிரஸுக்கு 2 அமைச்சர்கள்; புதிய வரலாறு- சொன்னதை செய்த விஜய்: மாணிக்கம் தாகூர் பெருமிதம்
காங்கிரஸுக்கு 2 அமைச்சர்கள்; புதிய வரலாறு- சொன்னதை செய்த விஜய்: மாணிக்கம் தாகூர் பெருமிதம்
NEET UG: அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு; இனி முறைகேடு இருக்காது- மத்திய அமைச்சர் உறுதி!
NEET UG: அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு; இனி முறைகேடு இருக்காது- மத்திய அமைச்சர் உறுதி!
Premalatha vs Vijay : முகத்தை மூடிக்கொண்டு முதல்வர் வீட்டிற்கு வந்தவர் யார்.? விஜய்யை விடாமல் மீண்டும் துரத்தும் பிரேமலதா
முகத்தை மூடிக்கொண்டு முதல்வர் வீட்டிற்கு வந்தவர் யார்.? விஜய்யை விடாமல் மீண்டும் துரத்தும் பிரேமலதா
பெட்ரோல் கொடுத்த 'ஷாக்'! உலக நாடுகளை விட இந்தியாவில் பாதிப்பு குறைவா? மத்திய அரசு அதிரடி விளக்கம்
பெட்ரோல் கொடுத்த 'ஷாக்'! உலக நாடுகளை விட இந்தியாவில் பாதிப்பு குறைவா? மத்திய அரசு அதிரடி விளக்கம்
Tamilnadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(16-05-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Tamilnadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(16-05-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
DMK election defeat : திமுக தோல்விக்கு இந்த 11 காரணங்கள்.! லிஸ்ட் போட்டு ஸ்டாலினுக்கு பதில் கொடுத்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
திமுக தோல்விக்கு இந்த 11 காரணங்கள்.! லிஸ்ட் போட்டு ஸ்டாலினுக்கு பதில் கொடுத்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
Kutralam Falls Status : குற்றாலத்திற்கு டூர் செல்ல திட்டமா.? அருவியில் தண்ணீர் கொட்டுதா.? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..
குற்றாலத்திற்கு டூர் செல்ல திட்டமா.? அருவியில் தண்ணீர் கொட்டுதா.? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..
மயிலாடுதுறையில் பயங்கரம்: 9 நாள் குழந்தையுடன் வந்த காதல் தம்பதி மீது தாக்குதல் - மாமனாருக்கு விலா எலும்பு முறிவு!
மயிலாடுதுறையில் பயங்கரம்: 9 நாள் குழந்தையுடன் வந்த காதல் தம்பதி மீது தாக்குதல் - மாமனாருக்கு விலா எலும்பு முறிவு!
Embed widget