மேலும் அறிய

ஓய்வூதியத்தில் 35 ஆயிரம் மரக்கன்றுகள்....இயற்கையை நேசிக்கும்  முன்னாள் ராணுவ வீரர்..!

கடந்த 50 ஆண்டுகளில் நாம் பாதுகாக்காமல் மாசு படுத்திய காற்றை சுத்தம் செய்யவும், மரங்களை விரைவாக வளர்க்கவும் குறுங்காடுகள் நமக்கும், பின்வரும் புதிய தலைமுறையினருக்கும் அவசர தேவையாக உள்ளது எனதெரிவித்தார்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, மன்னை நகர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கைலாசம். இவர் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். தனது இரு மகள்களுக்கும் திருமணம் ஆனநிலையில் மனைவியுடன் வசித்துவரும் இவர் ராணுவத்தில் பணியாற்றிய போதே மரங்கள் மீதும் அளவற்ற பற்று கொண்டவராக இருந்துள்ளார். அவர் பணிபுரிந்த பல மாநிலங்களிலும் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வந்துள்ளார். தற்போது 60 வயதாகவும் இவர் கடந்த 30 ஆண்டுகளாக மன்னார்குடி பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வருகிறார். “பசுமை கரங்கள்” எனும் பெயரில் இயற்கை ஆர்வலர்களை கொண்ட அமைப்பை உருவாக்கி அதன் மூலம் கோடை காலங்களிலும், காஜா புயல் போன்ற பேரிடர் காலங்களிலும் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றி பாதுகாத்து வருகிறார். பள்ளி, கல்லூரிகள், சாலை ஓரங்கள், ஆறு, குளம், ஏரிக்கரை, இயற்கை ஆர்வலர்களின் இல்லங்கள், ஆலயங்கள் என நகரின் பல பகுதிகளிலும் நிழல் தரும் பல வகையான மரக் கன்றுகளை நாள்தோறும் நட்டு வருகிறார் கைலாசம் அவர்கள் மரங்களின் மீது கொண்டுள்ள தீர காதலால் மன்னார்குடி அரசு கலை கல்லூரி, ஆர். பி. சிவம் நகர், மன்னார்குடி மகளிர் காவல் நிலையம், மன்னை நகர் என மன்னார்குடி மட்டுமின்றி அருகில் உள்ள புஷ்ப்பவனம் கிராமத்தில் குறுங்காடுகளை அமைத்து சிறந்த முறையில் பராமரித்து வருகிறார்.

ஓய்வூதியத்தில் 35 ஆயிரம் மரக்கன்றுகள்....இயற்கையை நேசிக்கும்  முன்னாள் ராணுவ வீரர்..!

மரங்களை நடுவதோடு விட்டுவிடாமல் இழுத்து செல்லும் வகையில் சிறிய தண்ணீர் வண்டி ஒன்றை தயார் செய்து அதில் நீர் நிரப்பி நாள் தோறும் குறிப்பாக கோடைகாலங்களில் நீரின்றி வாடும் சாலை ஓரங்களில் உள்ள மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றுவதை தனது தலையாக கடமையாகவும் செய்து வருவாகிறார் கைலாசம் அவர்கள். காஜா புயலுக்கு பல ஆயிரம் மரங்களை பறிகொடுத்து விட்டோமே என்றேண்ணி காடுகளை உருவாக்க வேண்டும் என நினைத்தார். பள்ளி கல்லூரிகள் பலவற்றில் குறுங்காடுகளை அமைக்க தொடங்கினார். வளர்ந்து வரும் தொழில்நுட்பம், வாகன பெருக்கம் போன்றவற்றால் பிராண வாயுவின் அளவு குறைந்து வருகிறது. எனவே தூய்மையான காற்றை இயற்கை முறையில் உற்பத்தி செய்வதற்கு மிக சிறந்த வழி மரங்களை வளர்த்து காடுகளை உருவாக்குவதே என கூறும் கைலாசம் கடந்த 50 ஆண்டுகளில் நாம் பாதுகாக்காமல் மாசு படுத்திய காற்றை சுத்தம் செய்யவும், மரங்களை விரைவாக வளர்க்கவும் குறுங்காடுகள் நமக்கும், நமக்கு பின்வரும் புதிய தலைமுறையினருக்கும் அவரச தேவையாக உள்ளது என தெரிவித்தார்.

ஓய்வூதியத்தில் 35 ஆயிரம் மரக்கன்றுகள்....இயற்கையை நேசிக்கும்  முன்னாள் ராணுவ வீரர்..!

மரங்களை பாதுகாப்பது குறித்த அக்கறையும் விழிப்புணர்வும் மக்கள் மனதில் வேரூன்ற வேண்டும். எனவே பொதுமக்கள் ஒத்துழைத்தால் நாட்டுக்குள் காட்டை உருவாக்குவது எளிது என கூறிய கைலாசம் மரம் வளர்ப்பது குறித்து மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க ஆசிரியர்கள் அல்லாத தனி குழு ஒன்றை அமைத்து மரம் வளர்பப்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கைலாசம் அவர்கள் இதுவரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளதாகவும் புதிய வனங்களை உருவாக்க தன்னிடம் மேலும் 30 ஆயிரம் மரக்கன்றுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். மரம் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மரம் வளர்க்க விரும்புபவர்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக தருவதாக கூறும் கைலாசம் கன்றுகளை சரியாக பராமரித்து பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  தனது குடும்பத்தை கவனித்தது கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை உருவாக்கியுள்ள கைலாசம் காடுகளை உருவாக்க மேலும் 30 ஆயிரம் மரக்கன்றுகள் இருப்பதாக கூறுகிறார் இடைவிடாது அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து செடிகளை பாராமரித்து பாதுகாக்கும் இவர் தனக்கு கிடைக்கும் ஓய்வூதிய தொகையை கொணடே மரங்களை பாதுகாக்கும் மகத்தான பணியை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
"பறிபோகும் தலைவர் பதவி" அண்ணாமலையை கைவிட்ட டெல்லி - தமிழிசை பக்கா ஸ்கெட்ச்!
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
"பறிபோகும் தலைவர் பதவி" அண்ணாமலையை கைவிட்ட டெல்லி - தமிழிசை பக்கா ஸ்கெட்ச்!
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
Vijayakanth: என்னோட கதையில் விஜயகாந்த் தான் வில்லனாக இருந்தார் – பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!
Vijayakanth: என்னோட கதையில் விஜயகாந்த் தான் வில்லனாக இருந்தார் – பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Embed widget