Thanjavur: போட்டிகளில் சாதனை படைக்கும் திருமங்கலக்கோட்டை கீழையூர் பள்ளி மாணவர்கள்
போராட்டம் என்று தெரிந்தாலும் துணிந்து போராடுபவர்கள்தான் காலத்தையும் தாண்டிய சாதனையை செய்து உயர்ந்து நிற்கிறார்கள். சட்டைப் பையில் வைத்துக் கொண்டு தேடும் சாவி போன்றது தான் வாய்ப்புகளும்.
தஞ்சாவூர்: போராட்டம் என்று தெரிந்தாலும் துணிந்து போராடுபவர்கள்தான் காலத்தையும் தாண்டிய சாதனையை செய்து உயர்ந்து நிற்கிறார்கள். சட்டைப் பையில் வைத்துக் கொண்டு தேடும் சாவி போன்றது தான் வாய்ப்புகளும். திறமை என்ற சட்டையை அணிந்து கொண்டு முயற்சி என்ற சாவியை எடுத்து விட்டால் வாய்ப்புகள் உங்கள் வீட்டை தேடி வரும்.
உயரத்தை அடைய நம்பிக்கை அவசியம். அந்த நம்பிக்கை உங்கள் மேல் இருப்பது அத்தியாவசியம். உழைக்கவும், உழைப்பின் பலனுக்காக உழைத்துக் கொண்டே காத்திருக்கவும் கற்றுக் கொள்பவர்கள்தான் சாதனையாளர்கள் ஆகின்றனர். அதுபோன்று உறுதியும், ஊக்கமும் கொடுத்து தங்கள் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றி உள்ளனர் தஞ்சை மாவட்டம் திருமங்கலக்கோட்டை கீழையூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்.
தொடர்ந்து சாதிக்கும் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு உறுதுணையாக உள்ளனர். இப்பள்ளி 12ம் வகுப்பு மாணவர் சுடர்வேந்தன் கிராமத்து போட்டோகிராபியில் மிக்க ஆர்வம். பள்ளி அளவில், வட்டார அளவில் மாவட்ட அளவில் முதலிடம் சாதனைப் படைத்த இம்மாணவர் திருவள்ளூரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டோகிராபி போட்டியில் பங்கு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். இப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி ரேகா வகுப்பு 9 தனி நபர் நடிப்பு போட்டியில் மாவட்டத்தில் முதலிடம் பெற்று நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றுள்ளார்.
இப்பள்ளி 12ம் வகுப்பு ஆகாஷ் கலை விழா போட்டியில் போஸ்டர் மேக்கிங் வரைலில் மாவட்ட அளவிலும், 12ம் வகுப்பு மாணவி ஸ்ரேயா ஆங்கில கட்டுரை போட்டியிலும், நந்தனா தமிழ் கட்டுரை போட்டியிலும் வட்டார அளவில் வெற்றி பெற்று மாவட்ட போட்டிக்கு முன்னேறி சான்றிதழ் பெற்றுள்ளனர்.
12ம் வகுப்பு மாணவர் மகேஸ்வரன் கவிதை எழுதுதல், 11ம் வகுப்பு நகோமி கிராமிய நடனம், 12ம் வகுப்பு மாணவி சௌமியா திருக்குறள் ஒப்புவித்தல், 9ம் வகுப்பு மாணவர்கள் முகிலன் 3டி ஓவியம் வரைதல், சபரிநாதன் திருக்குறள் ஒப்புவித்தல், யுவராஜ் கிராமிய பாடல், 10ம் வகுப்பு மாணவி தாரிகா பிற மாநில நாட்டியம், 6ம் வகுப்பு மாணவி பொற்செல்வி களிமண் சிற்பம் உருவாக்குதல், 7ம் வகுப்பு மாணவர் குணபாலா தமிழ் கையெழுத்து போட்டி, மாணவிகள் அமிர்தா கவிதை ஒப்புவித்தல், திவ்யஸ்ரீ ஆங்கில கையெழுத்து போட்டி, அனுஷா கிராமிய பாடல், 8ம் வகுப்பு மாணவி ரித்திகா பேச்சுப்போட்டி, கிருத்திகா ஓவியப்போட்டி ஆகியவற்றில் வட்டார அளவில் பங்கேற்று சான்றிதழ் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மாணவிகளுக்கு உறுதுணையாக போட்டிகளில் பங்கேற்க ஆசிரியை விக்டோரியா மற்றும் அனுசியா பயிற்சி அளித்தினர். தலைமை ஆசிரியர் வளர்மதி பக்கப்பலமாக நின்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை உற்சாகப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
வெற்றிப்பெற்ற மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் ஆறுமுகம், திருக்குமரன், அறிவொளி, மாதவி, ஆனந்த ஜோதி, தீபா, காயத்ரி, தனலட்சுமி, தர்மராஜ், பாலாஜி, கர்ணன், தவச்செல்வி, நித்தியா, சித்தார்தன், ராஜசுதா, சோனியா, ராதிகா ஆகியோர் பாராட்டி மேலும், மேலும் ஊக்கம் அளித்தனர். மாணவர்களின் சாதனைகளை பெற்றோர்கள் மற்றும் கிராம மக்களும் பாராட்டினர்.