112 பயனாளிகளுக்கு ரூ.45.49 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: எந்த துறைகள் வழங்கியது?
112 பயனாளிகளுக்கு ரூ.45.49 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. எங்கு தெரியுங்களா?
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டம், திருநல்லூர் சரகம், கிளாமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 112 பயனாளிகளுக்கு ரூ.45,49,180 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கிளாமங்கலத்தில் மக்கள் நேர்காணல் முகாம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டம், திருநல்லூர் சரகம், கிளாமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 112 பயனாளிகளுக்கு ரூ.45,49,180 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டம், திருநல்லூர் சரகம், கிளாமங்கலம் கிராமத்தில் "மக்கள் நேர்காணல் முகாம்" நடந்தது. தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி முன்னிலை வகித்தார்.
பலதுறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள்
இம்முகாமில் 112 பயனாளிகளுக்கு ரூ. 45 லட்சத்து 49 ஆயிரத்து 180 மதிப்பீட்டில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை. வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, மாவட்ட தொழில் மையம், மருத்துவத்துறை போன்ற பல்வேறுத் துறைகள் சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூறியதாவது:
பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டம், திருநல்லூர் சரகம், கிளாமங்கலம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் இன்று நடைபெறுகிறது.
மேலும், வருவாய்த் துறை சார்பில் 23 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், வாரிசு சான்று, இறப்பு சான்று, சிறு,குறு விவசாயி சான்று, ஆண் குழந்தை இன்மை சான்றும், 19 பயனாளிகளுக்கு ரூ.4,00,500 மதிப்பீட்டில் திருமண உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையும், 24 பயனாளிகளுக்கு புதிய மின்னணு அட்டையும், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.31,85,000 மதிப்பீட்டில் கலைஞர் கனவு இல்லம், ஊரக வீடுகள், பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது.
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை நலத்திட்ட உதவி
இதேபோல் வேளாண்மைத் துறை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.6,680 மதிப்பீட்டில் ஸ்ப்ரேயர், சிங்க்சல்பேட், சூடோமோனாஸ், உயிர் உரத்திற்கான ஊக்கத்தொகையும், தோட்டக்கலைத் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.24000 மதிப்பீட்டில் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னை பரப்பு விரிவாக்க தொகையும், மாவட்ட தொழில் மையம் சார்பில் NEEDS, AABCS திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.9,33,000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
மேலும் மருத்துவத் துறை சார்பில் 18 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 112 பயனாளிகளுக்கு ரூ.45,49,180 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் 3 பயனாளிகளுக்கு டிராக்டர் வாங்குவதற்காக வங்கி மானியத்துடன் கூடிய கடனுதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் நலனை மனதில் கொண்டு மக்களுடன் முதல்வர், நான் முதல்வன், காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, உங்கள் தொகுதியில் முதலமைச்சர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்தை உறுதி செய், மக்களைத் தேடி மருத்துவம், மக்கள் நேர்காணல் முகாம், உங்களைத்தேடி உங்கள் ஊரில் போன்ற பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் கிருஷ்ணசாமி, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சங்கர், மக்கள் செய்தி தொடர்பாளர் மதியழகன், திருவோணம் ஒன்றியக் குழுத் தலைவர் செல்வம் சௌந்தர்ராஜன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஜோதி ராஜமாணிக்கம் , கிளாமங்கலம் ஊராட்சித் தலைவர் கொலம்பஸ், திருவோணம் வட்டாட்சியர் முருகவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.