மேலும் அறிய

பள்ளிக்கூடத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டி சரஸ்வதி நகரில் பள்ளிக்கூடத்திற்காக ஒதுக்கப்பட்ட பொது இடத்தில் சில குடும்பங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டி சரஸ்வதி நகரில் பள்ளிக்கூடத்திற்காக ஒதுக்கப்பட்ட பொது இடத்தில் சில குடும்பங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் தஞ்சை கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது, மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அந்த வகையில் தஞ்சாவூர் அருகே மானோஜிபட்டி சரஸ்வதி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:

தஞ்சாவூர் அருகே மானோஜிபட்டியில் அமைந்துள்ளது சரஸ்வதி நகர். இங்கு பள்ளி கூடம் அமைப்பதற்காக அரசு சார்பில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை சில குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதே போல் இப்பகுதியில் இயங்கி வரும் அங்கன்வாடி கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. தற்போது தனியார் இடத்தில் இயங்கி வருகிறது. உடனடியாக புதிய கட்டிடம் பணிகளை தொடங்குமாறு அறிவுருத்த வேண்டுமாறும் பள்ளிக் கூடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிவிட்டு அங்கு மக்கள் பொது பயன்பாட்டு கட்டிடம் அமைக்கலாம்.

எனவே பள்ளிக்கூடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளப் பெரம்பூர் பகுதியில் விலை நிலங்களை சேதப்படுத்தி வரும் பன்றிகளை வனத்துறைகளை கொண்டு பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி விவசாயி ஒருவர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி. இவருக்கு சொந்தமாக கள்ளப்பெரம்பூர் முதல் சேத்தி மற்றும் இரண்டாம் சேத்தி பகுதியில் விளைநிலங்கள் உள்ளது. அங்கு நெல் நாற்றுகள் அனைத்தும் கதிர் விடும் பருவத்தில் உள்ளது. இந்நிலையில் அங்கு சுற்றி தெரியும் காட்டுப்பன்றிகள் வயல்களில் இறங்கி நெல் நாற்றுகளை நாசம் செய்கிறது. எனவே இது குறித்து வனத்துறையினரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நெல் நாற்றுகள் அனைத்தும் வீணாகும் நிலையில் உள்ளது. எனவே காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் மூலம் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா பின்னையூர் பகுதியை சேர்ந்தவர் ராசு (74) என்பவர் கொடுத்த மனுவில், எனக்கு நான்கு மகன்கள் உள்ளனர். நான்கு மகன்களுக்கும் திருமணமாகி விட்டது. என் மகன்கள் என்னையும். எனது மனைவியையும் அடிந்து துன்புறுத்தி எந்த விதமான உதவியும் செய்வதில்லை.

மேலும் எனக்கு 7 ஏக்கர் நிலம், 3 மீன் குட்டைகள், 250 தென்னை மரம் 2 மாடி வீடு  ஆகிய சொத்துக்கள் எனது பெயரில் உள்ளது. எனது சொத்துக்கான ஆவணங்கள் (பந்திரம்) அனைத்தையும் எனது மகன் ஆசைதம்பி மனைவி அனிதா, சரவணன் இருவரும் பெற்று கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் சரவணன் மனைவி அனிதா நாங்கள் கட்டிய வீட்டில் எங்களை குடியிருக்க விடாமலும், உணவு கொடுக்காமலும் என்னையும் எனது மனைவியுைம் அடித்து தகாத வார்த்தையால் திட்டி மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார்.

எனவே கருணையுள்ளம் கொண்ட மாவட்ட கலெக்டர் எனது பெரிய மகனிடமிருந்து சொத்து ஆவணங்களை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு சொத்து ஆவணங்களை மீட்டு தந்தால் 4 மகன்களுக்கு பாகம் பிரிக்க உதவியாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

விபத்து நடக்கும் முன் விழித்துக் கொள்ளுங்கள்! தஞ்சையில் ஆபத்தான மேன்ஹோல்களை சீரமைக்க வலியுறுத்தல்
விபத்து நடக்கும் முன் விழித்துக் கொள்ளுங்கள்! தஞ்சையில் ஆபத்தான மேன்ஹோல்களை சீரமைக்க வலியுறுத்தல்
மாற்றத்தை நோக்கி பேரணி... இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார இயக்கம் நிறைவு
மாற்றத்தை நோக்கி பேரணி... இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார இயக்கம் நிறைவு
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Embed widget