மேலும் அறிய

92 ஆயிரம் மணல் மூட்டைகள், 30,755 தடுப்பு கம்புகள் தயார்நிலை: எங்கு எதற்கு தெரியுங்களா?

தஞ்சையில் வடகிழக்கு பருவமழையை பாதிப்பு இல்லாதவாறு எதிர்கொள்வது குறித்து மாவட்ட பேரிடர் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர்: வடகிழக்கு பருவமழையை பாதிப்பு இல்லாதவாறு எதிர்கொள்வது குறித்து மாவட்ட பேரிடர் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தஞ்சாவூரில் நடந்தது.

மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை 2024. ஐ எந்தவித பாதிப்புகளும் இல்லாதவாறு நடவடிக்கை எதிர்கொள்வது தொடர்பாக தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் தொடர்புடைய அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட பேரிடர் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, சுழற்சி முறையில் பணியாளர்கள் தொடர்ந்து பணி புரிந்து வருகின்றனர் எனவும், பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை தொடர்பான பாதிப்புகள், கோரிக்கைகளை  கட்டணமில்லா தொலைபேசி எண்-1077, தொலைபேசி எண் 04362-230121, வாட்ஸ்அப் எண்-93450 88997 என்ற எண்களை பயன்படுத்திக் தெரிவித்திடலாம். தஞ்சாவூர் மாவட்டத்தில் 251 நிவாரண மையங்கள், 14 பலநோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், 7 புயல் பாதுகாப்பு மையங்கள், 50 படகுகள். 67 கனரக இயந்திரங்கள். 378 அறுவை இயந்திரங்கள், 68 மரம் வெட்டும் இயந்திரங்கள், 72 ஜெனரேட்டர்கள், 42 தண்ணீர் வெளியேற்றும் இயந்திரங்கள், 91985 மணல் மூட்டைகள், 30755 தடுப்பு கம்புகள் ஆகியவை தயார்நிலையில் உள்ளது. 4550 முதல் நிலை பணியாளர்கள் மற்றும் ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் 300 முதல்நிலை பணியாளர்கள் ஆகியோர் தயார்நிலையில் உள்ளனர்.

தீயணைப்புத்துறையினரும் ரெடியாக இருக்காங்க

வடகிழக்கு பருவமழையின்போது மீட்புப்பணிகளை மேற்கொள்ள ஏதுவாக  தீயணைப்பு துறையில் inflatable rubber boats, life buoys, life jackets and rubber dinghies போன்ற உபகரணங்கள் தயார்நிலையில் உள்ளது. வெள்ளக்காலங்களில் பயன்படுத்திட ஏதுவாக தேவையான அளவில் மருந்துப்பொருட்கள், ஆம்புலன்சுகள் ஆகியவற்றை தயார்நிலையில் வைத்திருக்கவும் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களின் பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்கவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அனைத்து கழிவு நீர் வாய்க்கால்களும் அடைப்புகள் ஏதுமின்றி கழிவு நீர் தேங்காதவாறு சுத்தம் செய்திட வேண்டும்.

அனைத்து பாலங்கள் மற்றும் மதகுகளுக்கு கீழ் உள்ள அடைப்புகள் சுத்தம் செய்திடவேண்டும். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காதவாறு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளவேண்டும் எனவும் தொடர்புடைய துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுக்கட்டடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடிகள், தங்கும் விடுதிகள், பேருந்து நிலையங்கள், அலுவலகக் கட்டடங்கள் மற்றும் மேல்நிலைத் தொட்டிகள், பாலங்கள் மற்றும் மதகுகள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளில் சேதமடைந்த மற்றும் பழுதடைந்த கட்டமைப்புகளை அடையாளம் கண்டறிந்து உடனடியாக அவற்றை பழுது நீக்கம் செய்திடவும், தேவையான நேர்வில் அப்புறப்படுத்திடவும் தொடர்புடைய துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

தேவையான அளவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குடிநீர் சேமித்து வைத்திடவும் தொடர்புடைய துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையின்போது சரிந்து விழும் மின்கம்பங்களை உடனுக்குடன் சரிசெய்திடவும். சரிந்து விழும் மரங்களை அப்புறப்படுத்திடவும் தயார் நிலையில் இருக்குமாறு தொடர்புடைய துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்  பாலகணேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து  கொண்டனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget