மகிழ்ச்சியான தீபாவளியை கொண்டாட என்ன செய்யணும்? மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் தண்ணீரை ஊற்ற வேண்டும். உடலில் தீப்பற்றினால் ஓட முயற்சி செய்யக் கூடாது. கனமான போர்வை போன்ற துணிகளை போர்த்தி தீயை அணைக்க முயற்சி செய்ய வேண்டும் .
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் காரைக்கால் சாலையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் விபத்து இல்லாத தீபாவளி கொண்டாடுவதற்காக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பட்டாசுகளை எப்படி வெடிக்க வேண்டும்?
நிகழ்ச்சிக்கு கும்பகோணம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். அப்போது அவர்கள் கூறுகையில், பட்டாசுகளை கையில் வைத்து வெடிக்கக் கூடாது. பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் தண்ணீரை ஊற்ற வேண்டும். உடலில் தீப்பற்றினால் ஓட முயற்சி செய்யக் கூடாது. கனமான போர்வை போன்ற துணிகளை போர்த்தி தீயை அணைக்க முயற்சி செய்ய வேண்டும் . உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். மேலும் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.
விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்
தொடர்ந்து தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்ட்டது. இந்த நிகழ்ச்சியில் கும்பகோணம் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ரவி, போக்குவரத்து பணியாளர் ஞானசேகரன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
வெடி வெடிக்கும்போது என்ன செய்யணும்?
தீபாவளி நேரத்தில் சிறுவர்கள் சிறுமிகள் வெடி வெடிக்கும் ஆர்வத்தில் தீக்காயம் அடைகின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வெடி வெடிக்கும் போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை தெளிவாக இந்த நிகழ்ச்சி நடந்தது. இதன் மூலம் வெடி வெடிக்கும்போது பாதுகாப்பாக இருப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாணவ, மாணவிகள் தரப்பில் கூறுகையில், வெடி விபத்தில் சிக்கிக் கொள்ளாமல் அதே நேரத்தில் தீபாவளி மகிழ்ச்சியான தீபாவளியாக கொண்டாடும் வகையில் தீயணைப்புத் துறை வீரர்கள் எங்களுக்கு செயல் விளக்கம் செய்து காட்டினர். இது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்று தெரிவித்தனர்.