மேலும் அறிய

அனுமதியில்லாமல் சாக்கடை இணைப்பு: தஞ்சாவூர் தனியார் மது பாருக்கு ரூ.1.09 கோடி அபராதம்!

8 ஆண்டுகளாக அனுமதியின்றி பாதாளச் சாக்கடை இணைப்பை பயன்படுத்தி வந்த அதிமுக முன்னாள் கவுன்சிலருக்குச் சொந்தமான ஹோட்டல் ராம்நாத் என்ற ஓட்டலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.62.54 லட்சம் அபராதம் விதித்தனர்.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த 8 ஆண்டுகளாக உரிய அனுமதியின்றி திருட்டுத்தனமாக பாதாளச் சாக்கடை இணைப்பு பயன்படுத்திய  இரண்டு பிரபல ஓட்டல்கள் – மதுபானக் கூடம் (பார்) ஆகியவற்றிற்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையாக ரூ.1.09 கோடி அபராதம் விதித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாநகராட்சிப் பகுதியை ஒட்டியுள்ள ஊராட்சிப் பகுதிகளில் உள்ள தங்கும் அறைகளுடன் கூடிய ஓட்டல்கள் மற்றும் கடைகளில் அனுமதியின்றி பாதாளச் சாக்கடை இணைப்பு பயன்படுத்தப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதனடிப்படையில், மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், செயற் பொறியாளர் ஜெகதீஸன் ஆகியோர்  பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.


அனுமதியில்லாமல் சாக்கடை இணைப்பு: தஞ்சாவூர் தனியார் மது பாருக்கு ரூ.1.09 கோடி அபராதம்!

அப்போது தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே நீலகிரி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள தங்கும் அறைகளுடன் கூடிய ஹோட்டல் ராம்நாத் மற்றும் ஹோட்டல் அண்ணாமலை  ஆகிய இரண்டு பிரபல ஓட்டல்கள் மற்றும் மதுபானக் கூடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரை உரிய அனுமதியின்றி திருட்டுத்தனமாக பாதாளச் சாக்கடை இணைப்பில் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.

கடந்த 8 ஆண்டுகளாக அனுமதியின்றி பாதாளச் சாக்கடை குழாய்கள் இணைப்பு வழங்கப்பட்டு கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட இணைப்புகளைத் துண்டிக்க மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவிட்டதோடு, சம்பந்தப்பட்ட 2 ஓட்டல்கள் மற்றும் மதுபானக் கூடத்தின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டார். மாநகராட்சி ஆணையரின் உத்தரவின்பேரில், உதவி செயற் பொறியாளர் ராஜசேகரன், உதவிப் பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுவந்த பாதாளச் சாக்கடை இணைப்பை துண்டித்தனர்.


அனுமதியில்லாமல் சாக்கடை இணைப்பு: தஞ்சாவூர் தனியார் மது பாருக்கு ரூ.1.09 கோடி அபராதம்!

மேலும், 8 ஆண்டுகளாக அனுமதியின்றி பாதாளச் சாக்கடை இணைப்பை பயன்படுத்தி வந்த அதிமுக முன்னாள் கவுன்சிலருக்குச் சொந்தமான ஹோட்டல் ராம்நாத் என்ற ஓட்டலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.62.54 லட்சம் அபராதம் விதித்தனர். ஹோட்டல் அண்ணாமலை என்ற மற்றொரு ஓட்டலின் உரிமையாளருக்கு ரூ.44.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அனுமதியின்றி பாதாளச் சாக்கடை இணைப்பு பயன்படுத்திய மதுக்கூடத்திற்கு ரூ.2.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இவை மூன்றிற்கும் சேர்த்து மொத்தம் ரூ.1.09 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.


அனுமதியில்லாமல் சாக்கடை இணைப்பு: தஞ்சாவூர் தனியார் மது பாருக்கு ரூ.1.09 கோடி அபராதம்!

இந்நிலையில், தஞ்சை மாநகராட்சிப் பகுதியில், ஏராளமான பகுதிகளில் அனுமதியின்றி பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் வந்துள்ளது.  பொது மக்கள் யாரும், உரிய அனுமதியின்றி, செயல்படுத்தப்பட்டு  வரும் பாதாளச் சாக்கடை இணைப்பை பயன்படுத்துவது தெரியவந்தால் அவர்களுக்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் எச்சரித்துள்ளார்.

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள் சில...

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget