மேலும் அறிய

விடாத மழை... வடியாத தண்ணீர்: 1000 ஏக்கரில் நெற் பயிர்கள் பாதிப்பு எங்கு தெரியுங்களா?

தஞ்சையில் கனமழையால் பயன்பாட்டில்லாத பெருமாள் கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இந்த கனமழையால் மாவட்டம் முழுவதும் சுமார் 1000 ஏக்கரில் நெல் சாகுபடி நீரில் மூழ்கி உள்ளது.

தஞ்சை நகரில் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளில் மழைத்தண்ணீர் புகுந்தது. இளம் தாளடி சாகுபடி பயிர்களும் நீரில் மூழ்கின. இதேபோல் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மதகரம் பகுதியில் மழை நீரில் நெற் பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையுடன் உள்ளனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் சுமார் 1000 ஏக்கர் அளவிற்கு நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் நேற்று அதிகாலை முதல் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது. வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் டெல்டா மாவட்டங்களில்  கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.  

இதே போல் தஞ்சாவூர், திருவையாறு, அம்மாபேட்டை, சாலியமங்கலம், பாபநாசம், வல்லம், செங்கிப்பட்டி, கும்பகோணம், அய்யம்பேட்டை, திருவையாறு, கண்டியூர், பள்ளி அக்ரஹாரம், பூதலூர் அதிராம்பட்டினம் திருக்காட்டுப்பள்ளி, திருவிடைமருதூர் என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. 

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா மற்றும் தாளடி பயிர்கள் ஆயிரம் ஏக்கர் அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கணக்கீடு எடுக்கும் பணியில் வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


விடாத மழை... வடியாத தண்ணீர்: 1000 ஏக்கரில் நெற் பயிர்கள் பாதிப்பு எங்கு தெரியுங்களா?

தஞ்சாவூர் மாவட்டம் திட்டை சூரக்கோட்டை ஒரத்தநாடு பாபநாசம் மெலட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் சுமார் 3000 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் பாதிப்படைந்துள்ளது. அதேபோல் சுமார் 100 ஏக்கருக்கு மேல் வாழை சாகுபடியும் பாதிப்படைந்துள்ளது.

கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்கு செல்லவில்லை. தஞ்சாவூர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் 800-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் உள்ளது. சுமார் 5,000 மேற்பட்ட மீனவர் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் கனமழை எச்சரிக்கையாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சையில் கனமழையால் பயன்பாட்டில்லாத பெருமாள் கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. தஞ்சாவூர் அரண்மனையை அடுத்துள்ள தாஸ்தமால் சந்தில் பழமைவாய்ந்த பெருமாள் கோவில் இருந்தது. செங்கற்களால் கட்டப்பட்ட இந்த கோவில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் புதர் மண்டி காணப்பட்டது. இந்த நிலையில் இன்று தஞ்சையில் தொடர்ந்து இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் கோவிலின் ஒரு பகுதி முழுவதும் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்த மாநகராட்சி பணியாளர்கள் இடிபாடு பகுதியை அகற்றி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து மழை பெய்யும் என்பதால் பழுதடைந்த மற்ற பகுதிகளையும் பாதுகாப்பாக இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Embed widget