மேலும் அறிய

தஞ்சையில் திமுக பிரமுகரின் கட்டுப்பாட்டில் இருந்த 100 கோடி மதிப்புள்ள மாநகராட்சி சொத்துக்கள் மீட்பு

’’சுதர்சன சபா கடந்த காலங்களில் திமுக பிரமுகர் ஆர்.கே.ராமநாதன் என்பவர் 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் நிர்வகித்து வந்தார்’’

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே 1927 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சுதர்சன சபா என்ற நாடக மன்றம் உள்ளது. இந்த சபாவில் நாடகம், கலை நிகழ்ச்சிகள் மற்றும்  சொற் பொழிவுகள்  நடத்தப்பட்டு வந்தது. தஞ்சை  பழைய பஸ் நிலையம்  அண்ணா சிலை அருகில், மாநகராட்சிக்கு சொந்தமான சுதர்சன சபா உள்ளது. இந்த சபா குத்தகை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இந்த சபாவின் முன்பகுதியில் கடைகளில்,  ஒரு உணவகம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக உணவகம் செயல்பட்டு  வந்தது.

மேலும்,  இந்த வளாகத்தில் மதுபான பார், பேக்கரி கடை, செல்போன் கடை ஆகியவையும் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த உணவகம் மற்றும் மதுபான பார், பேக்கரி கடை, செல்போன் கடை ஆகியவை நகர ஊரமைப்பு சட்டம் 1971 விதிகளின்படி உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது. எனவே இந்த கட்டிடங்களை பூட்டி சீல் வைக்கப்போவதாக மாநகராட்சி சார்பில் கடந்த 13.8.2021 அன்று அறிவிப்பு கொடுக்கப்பட்டது.

தஞ்சையில் திமுக பிரமுகரின் கட்டுப்பாட்டில் இருந்த 100 கோடி மதிப்புள்ள மாநகராட்சி சொத்துக்கள் மீட்பு

இதனை தொடர்ந்து, கடைகளின் உரிமையாளர்கள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த  வழக்கில், கட்டிடம் தொடர்பாக அரசிடம் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்று கொள்ளுமாறு கோர்ட் அறிவுறுத்தி இருந்தது. ஆனால் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் உணவகத்திற்கு அனுமதி பெற்றதற்கான விவரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் உணவகத்தை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 22.9.2021 அன்று பூட்டி சீல் வைத்தனர். இதனை  தொடர்ந்து மதுபானகூடம், பேக்கரி, செல்போன் கடை ஆகியவற்றுக்கு கால அவகாசம் உள்ளதால் அந்த கடைகளில் மாநகராட்சி சார்பில் கடந்த 22ஆம் தேதி நோட்டீசு ஒட்டப்பட்டது.

அதில், சுதர்சன சபா வளாகத்தில் உள்ள பேக்கரி, மதுபான கூடம், செல்போன் கடை ஆகிய மூன்று கட்டிடத்திற்கு 13.8.2021 அன்று நகர் ஊரமைப்பு சட்டம் 1971 ன் படி அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் மேற்படி கட்டிடத்தை உரிய அறிவிப்பின் கீழ் உரிய அனுமதி பெற்ற விவரம் சமர்ப்பிக்காததால் அல்லது திருத்தி அமைக்காததால் இந்த கட்டிடம் நகர் ஊரமைப்பு சட்டத்தின்படி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.

தஞ்சையில் திமுக பிரமுகரின் கட்டுப்பாட்டில் இருந்த 100 கோடி மதிப்புள்ள மாநகராட்சி சொத்துக்கள் மீட்பு

அதன்படி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர்  ராஜசேகரன், இளநிலை பொறியாளர் கண்ணதாசன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று  சுதர்சன சபா வளாகத்தில் அமைந்துள்ள பேக்கரி, மதுபான கூடம், செல்போன் கடை ஆகிய மூன்று கடைகளுக்கு காலை 10 மணிக்கு பூட்டி  சீல் வைத்தனர். பின்னர் அக்கடைகளில் பூட்டி முத்திரையிடுதல் உத்தரவை ஒட்டினர். இதனை தொடர்ந்து சுதர்சன சபா கடந்த காலங்களில் திமுக பிரமுகர் ஆர்.கே.ராமநாதன் என்பவர் 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் நிர்வகித்து வந்தார். மேலும், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையையும் செலுத்தவில்லை, இதனால் அரசுக்கு  வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் உத்தரவின்படி, மாநகராட்சிக்கு சொந்தமான சுதர்சன சபா உள்ள 40 ஆயிரத்து 793 சதுர அடி கொண்ட கட்டிடம் மற்றும் இடத்தை, ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல் சட்டம் 1975-ன் படி தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து  மாநகராட்சி வசம் கையகப்படுத்தி தண்டோரா போட்டு, நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், நகராட்சி பொறியாளர்கள் கண்ணதாசன், மகேந்திரன், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா ஆகியோர் முன்னிலையில் 1.2.2022 அன்று அதிகாரிகள் கையகப்படுத்தியதற்கான நோட்டீஸ் சபாவின் கதவருகே ஒட்டினர். கையகப்படுத்திய இடத்தில் உள்ள பொருட்களை வெளியே எடுத்துக் கொள்ள ஒரு வார காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி கையகப்படுத்திய இடத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.100 கோடி இருக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chidambaram issue : முற்றிய தீட்சிதர்கள் வாக்குவாதம்! உடனே OFF செய்த நீதிபதி! OK சொன்ன அறநிலையத்துறைTemple AC Water : அது தீர்த்தம் இல்ல.. AC தண்ணி! உ.பி கோயிலில் அவலம்! ”டேய் பரமா படிடா”Rahul about Priyanka | ”அப்பாவை கொன்றவரைகட்டி அணைத்தவர் பிரியங்கா”கண்கலங்கிய ராகுல் காந்திIND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
"ரொட்டியையும் பெண்களையும் களவாடும் வங்கதேச குடியேறிகள்" மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
”I am not Interested -  ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
”I am not Interested - ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
Embed widget