மேலும் அறிய
சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவு தினம் - புதுச்சேரி அமைச்சர் சந்திரபிரியங்கா மரியாதை
காரைக்கால் மீன்பிடித்துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய மீனவர்கள் அமைச்சர் சந்திரபிரியங்காவிடம் கோரிக்கை
![சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவு தினம் - புதுச்சேரி அமைச்சர் சந்திரபிரியங்கா மரியாதை Sinthanai Serpi Singaravelar Memorial Day - Puducherry Minister Chandrapriyanka honored சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவு தினம் - புதுச்சேரி அமைச்சர் சந்திரபிரியங்கா மரியாதை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/11/871770bb6537f6e4e96e5eeeaccbaa96_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவு தினம்
தமிழ்நாட்டை சேர்ந்த பொதுவுடமைவாதியாகவும், தொழற்சங்கவாதியாகவும் விளங்கிய சிங்காரவேலர் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். மயிலாப்பூர் சிங்காரவேலு என்ற முழுப்பெயர் கொண்ட மீனவ சமுதாயத்தில் பிறந்த இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக "சிந்தனைச் சிற்பி " என்று அனைவராலும் போற்றப்படுகிறார். அவரது நினைவு நாளை ஒட்டி காரைக்காலில் இன்று அவரது உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா அமைச்சர் சென்ற பிரியங்கா மீனவர் பஞ்சர கற்கள் என பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
![சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவு தினம் - புதுச்சேரி அமைச்சர் சந்திரபிரியங்கா மரியாதை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/11/0b6ff21f585047cc1b68fed5d61a780b_original.jpg)
இதற்காக மதகடியில் உள்ள அவரது சிலைக்கு மாலையிட வந்த அமைச்சர் சந்திரப் பிரியங்காவை சந்தித்த மீனவ பிரதிநிதிகள், காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் முகத்துவாரத்தை தூர்வாரி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சந்திர பிரியங்கா மீனவர்களிடம் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
மதுரை
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion