மயிலாடுதுறை: கடல்நீரால் பாழாகும் விளைநிலங்கள் - விவசாயிகள் வேதனை
தரங்கம்பாடி உப்பனாற்றின் கரை மற்றும் கதவணைகள் பழுதால் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு வெள்ளக்காடான காட்சியளிக்கும் விளைநிலங்களால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தரங்கம்பாடி வழியே உப்பனாறு வடிகால் வாய்க்காலாக கடலில் கலக்கிறது. இந்த உப்பனாறு கும்பகோணம், மயிலாடுதுறை பகுதிகளின் பிரதான வடிகால் ஆறுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. அதே போல் தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதி விளைநிலங்களில் இருந்து வடிகால் கிளை வாய்க்கால்கள் மூலம் உபரிநீர் உப்பனாற்றின் வழியே கடலில் கலந்து கடலில் சென்று கலக்கிறது.
இந்த ஆற்றின் கரைகள் கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதைந்து போனதால் கடல் மட்டம் உயரும் நாட்களில் ஆற்றின் வழியே கடல் நீர் உட்புகுந்து சுற்றியுள்ள பகுதிகளிலும் வயல்களிலும் தேங்கி வருகிறது. அதே போல் வடிகால் கிளை வாய்க்கால் கதவணைகள் பழுதடைந்ததால் அவற்றின் வழியே உட்புகுந்த கடல் நீரால் விளைநிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளது. மேலும், இதன் காரணமாக நிலத்தடி நீரின் தன்மையும் பாதிக்கபட்டுள்ளது.
EPS Condemn : காமராஜ் வீட்டில் சோதனை: பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடுங்க - கொந்தளிக்கும் எடப்பாடி
தரங்கம்பாடி நகர் பகுதியில் இருந்து முகத்துவாரம் வரை உப்பனாற்றின் இருபக்க கரைகளும் சிதைந்து போனதால், மழைக்காங்களில் மழைநீர் கடல் நீருடன் கலந்து தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதி முழுவதும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆற்றின் முகத்துவாரம் தூர்வாரப்படாததால் தேங்கும் மழை நீர் கடலுக்கு செல்லாமலும், கடல் சீற்றத்தால் கடல் நீர் உட்புகுவதாலும் நகர்பகுதி முழுவதுமே கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால் விநாயகர் பாளையம், ஆர்.என் பாளையம், சமையன்தெரு, காவாளமேட்டுத்தெரு, தெற்கு அலங்கம், ஆற்றங்கரைத்தெரு, கழுவன்திட்டு, சிந்தாதிரிப்பேட்டை, விஜிடி நகர், ராஜூவ்புரம் மற்றும் காத்தான்சாவடி உள்ளிட்ட கிராமங்களும் தரங்கம்பாடி நகர் பகுதியும் முற்றிலும் கடல் நீர் சூழ்ந்து விவசாயமும் நீலத்தடி நீரும் பாதிக்கபட்டுள்ளது.
மேலும் ஆற்றின் வழியே கடல்நீர் 10 கிலோ மீட்டர் வரை உட்புகுந்ததால் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயமும் நிதத்தடிநீர் ஆதாரமும் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. எனவே தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற் மழைக்காலம் தொடங்கும் முன்பாக உப்பனாற்றின் முகத்துவாரத்தை தூர்வாரியும் இருபக்க கரைகளை பலப்படுத்தி வடிகால் கதவணைளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்