மேலும் அறிய
Advertisement
நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா
73 குடியரசு தின விழாவை முன்னிட்டு நாகையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, 1கோடியே 2 லட்சத்து 61 ஆயிரத்து 159 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வழங்கினார்
நாட்டின் 73 குடியரசு தின விழாவை முன்னிட்டு நாகையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, 1 கோடியே 2 லட்சத்து 61 ஆயிரத்து 159 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வழங்கினார். இந்தியாவின் 73 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர், தீயணைப்பு படை வீரர்கள், கால்நடை துறையினர், வேளாண்மைத்துறை அலுவலர்கள், நகராட்சி நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் 1கோடியே 2 லட்சத்து 61 ஆயிரத்து 159 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கினார். தொடர்ந்து பாரம்பரிய பரை இசை, மயிலாட்டம், மானாட்டம், சோழர்கள், பல்லவர்கள் போற்றி வளர்க்கப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான தரையில் ஊன்றப்பட்டு இருக்கும் கம்பத்தில் ஏரி யோகாசனம் செய்யும் மல்லர் கம்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் அங்கு நடைபெற்றது.
அப்போது தீயணைப்பு துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது அதை வெளியூர் செல்லும்போது வீட்டில் மின்சார மெயினை அனத்து செல்ல வேண்டும், தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், கேஸ் சிலிண்டரில் ஏற்படும் தீ விபத்து வானலியில் ஏற்படும் தீ விபத்து போன்றவற்றை எவ்வாறு அழனைப்பது என செய்முறை விளக்கங்களும் அங்கு பயனுள்ள வகையில் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரானா மூன்றாவது அலை பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு சமூக வலைதளம் மூலம் வீட்டிலிருந்தபடியே காண நாகை மாவட்ட மக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
க்ரைம்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion