மேலும் அறிய
நாகையில் குண்டும் குழியுமான சாலையை ஒன்றுபட்டு சீரமைத்த கிராம மக்கள்
நாகை அருகே, குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை கோரிக்கை விடுத்தும் செவிசாய்க்காத தால் ஒன்றுபட்ட கிராம மக்கள்

குண்டும் குழியுமான சாலை
நாகை மாவட்டம், கீழையூர் அடுத்துள்ள ஈசனூர் ஊராட்சி வழியாக கீழையூர் முதல் திருக்குவளை வரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை கடந்த ஆண்டு புதிதாக போடப்பட்டது, வேலவன் கட்டளையில் 200 மீட்டர் நீளமுள்ள சாலை மட்டும் அமைக்கப்படாமல் அதற்கான நிதி இல்லை என கிடப்பிலேயே போடப்பட்டதாக குற்றம்சாட்டும் கிராம மக்கள் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதோடு, ஆபத்து ஏற்படுத்தும் பள்ளங்களும் நிறைந்து உள்ளதால் சாலையைப் பயன்படுத்தும் விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலதரப்பட்டவர்களும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் நிலையில் கிராம மக்கள் மற்றும் இளைஞர் மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து டிராக்டர் மூலமாக 3 டிப்பர் சிறு செங்கற்கள் கொண்டு சாலையிலுள்ள பள்ளங்களை மூடி சாலையை தற்காலிகமாக சீரமைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடி ஆய்வு மேற்கொண்டு தார் சாலையாக அமைத்து வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர் சாலை சீரமைக்கப்படாத பட்சத்தில் அப்பகுதி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை அருகே கடற்கரை பகுதியில் 5 ஏக்கரில் சோதனை முறையில் ஆளுயர மாப்பிள்ளை சம்பா சாகுபடி செய்து பட்டதாரி இளைஞர் சாதனை

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த விழுந்தமாவடி சேர்ந்தவர் அலைஅருண் எம்பிஏ பட்டதாரியான இவருக்கு காமேஸ்வரம் ஊராட்சி தாண்டவமூர்த்திகாடு கடலோர பகுதியில் 5 ஏக்கர் நிலம் உள்ளது சுனாமியால் அப்பகுதியில் கடல்நீர் உட்புகுந்து உவர் நிலமாக இருந்த நிலையில் சென்ற ஆண்டு நவீன ரக நெல்லை சோதனை முறையில் சாகுபடி செய்த நிலையில் சரிவர விளைச்சல் இல்லாத நிலையில் தனது தாத்தா ஆலோசனைப்படி பாரம்பரிய நாட்டுரக மான 180 நாட்கள் கொண்ட வெள்ளம் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியதும் ஆளுயர ஏழு அடி வரை வளரக் கூடிய மாப்பிள்ளை சம்பா சாகுபடியை உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்காமல் எந்தவித ரசாயனமும் கலக்காமல் இயற்கையான முறையில் 5 ஏக்கரில் சோதனை முறையில் சாகுபடி செய்து தற்பொழுது அறுவடைக்கு தயாராக உள்ளது .

மேலும் விவசாயத்தில் ஆர்வம் கொண்ட பட்டதாரி இளைஞர் அலைஅருண் தெரிவிக்கும் போது பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி, பனங்காட்டு குடவாழை, நேபாள சீரகசம்பா, வெள்ளைப் பொன்னி,கொத்தமல்லி சம்பா,பிசினி,சீரக சம்பா,அறுபதாம் குறுவை, குழியடிச்சான். கருப்பு கவுனி உள்ளிட்ட நெல் ரகங்களை மீட்டெடுக்கும் வகையிலும் இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் இருக்கவேண்டும் என என்பதற்காகவும் பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து வருவதாகவும் அடுத்த ஆண்டு பல்வேறுநெல் ரகங்களை சாகுபடி செய்ய உள்ளதாகவும் இந்த சாகுபடி செய்வது தனக்கு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்த அலை அருண் மேலும் தமிழக அரசு பாரம்பரிய நெல் ரகங்கள் ஊக்குவித்து மானியத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமெனவும் விவசாயிகளும் பாரம்பரிய நெல் ரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மேன்மைப்படுத்த வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement