மேலும் அறிய

கும்பகோணத்தில் யாத்ரி நிவாஸ் வேண்டும் - ரயில்வே பயணிகள் வசதி மேம்பாட்டு குழுவிடம் கோரிக்கை

கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள, ரயில் பயணிகளுக்கான வசதிகள் குறித்த ஆய்வுக் குழுவின் அகில இந்திய ரயில்வே பயணிகள் வசதி மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் ஆய்வு

கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள, ரயில்  பயணிகளுக்கான வசதிகள் குறித்த ஆய்வுக் குழுவின் அகில இந்திய ரயில்வே பயணிகள் வசதி மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், மஞ்சுநாதா, கோட்லாஉமாராணி, அபிஜித்தாஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர், பயணிகளுக்கான முதலுதவி மருத்துவ மையம்,  பிளாட்பார பயணிகளின் இருக்கைகள், மேற்கூரைகள், நிழற்குடைகள் தரமானதாகவும், பாதுகாப்பாகவும் உள்ளதா,  கண்காணிப்பு கேமராக்களின் தெளிவாக தெரிகிறது,  ரயில் நிலையம் முழுவதும் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதா, தரமான சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுகிறதா என்றும், அதனை நுகர்ந்த பார்த்தும், குடித்து பார்த்தனர், கேன்டீனிலுள்ள உணவு பொருட்கள் காலாவதியான நாட்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து  துர்நாற்றம் இல்லாமல் சுத்தமாக  கழிவறை வசதிகள் பராமரிக்கப்படுகிறதா, கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என அனைத்து ரயில் நிலையத்திலுள்ள பகுதிகள் முழுவதையும் நேரில் பார்வையிட்டு இக்குழுவினர் ஆய்வு செய்தனர்.


கும்பகோணத்தில் யாத்ரி நிவாஸ் வேண்டும் - ரயில்வே பயணிகள் வசதி மேம்பாட்டு குழுவிடம் கோரிக்கை

ஆய்வின் போது, தென்னக ரயில்வே திருச்சி கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் ரயில்சரவணன்,  கடந்த 10 ஆண்டுகளாக நின்று சென்று கொண்டிருந்த மைசூர் மற்றம் திருச்செந்துார் விரைவு ரயில்கள்,  கொரோனா நோய் தொற்று காலத்தில் திடீரென பாபநாசம் ரயில் நிலையத்தில் நிறுத்தும் வசதி ரத்து செய்யப்பட்டது. தற்போது ரயில்வே நிர்வாகம் கொரோனா தொற்றுக்கு முன்பாக இயங்கிய அனைத்து ரயில்களும் நின்று சென்ற இடங்களில்,  நின்று செல்லும் ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தும், ஆனால் பாபநாசம் ரயில் நிலையத்தில், மைசூர் மற்றும் திருச்செந்துார் விரைவு ரயில்கள் நிறுத்தாமல் சென்று வருகின்றனர். இது தொடர்பாக எம்பிக்கள் சண்முகம், ராமலிங்கம், ஜிகே,வாசன், ரயில்வே நிர்வாக அதிகாரிகள் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தும் இது நாள் வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. பாபநாசம் ரயில் நிலையத்தில் வருடத்திற்கு 1.5 கோடியும், மாதம் தோறும் 11.5 லட்சம் வருவாய் பெற்று தரும் முக்கியமான ரயில் நிலையமாகும்.

மேலும் பாபநாசம் தாலுக்கா தலைநகரமாகவும், எம்எல்ஏ தொகுதியாகவும், ஆன்மீக திருக்கோயில் மையமாக இருப்பதாலும், குறிப்பாக திருக்கருக்காவூர், 108 சிவாலயம் போன்ற கோயில்களை தரிசனம் செய்வதற்காக கர்நாடகா மற்றும் கேரளா மாநிலத்திலிருந்து, வரும் ஆயிரக்கணக்கான பயணிகள் பாபநாசத்தில் இறங்க முடியாமல், கும்பகோணம் அல்லது தஞ்சை ரியில் நிலையங்களில் இறங்கி வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு காலவிரயம் மற்றும் செலவுகள் ஆகின்றது. எனவே, ஏற்கனவே ரயில்கள் நின்று சென்ற ரயில்களை மீண்டும் பாபநாசத்தில் நின்று செல்வதற்கு உத்தரவிட வேண்டும்.  மேலும், பாபநாசம் முன்பதிவு கணினி மையம், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுகின்றது. அடிக்கடி இங்கு மின்தடை ஏற்படுவதால், மாற்று ஏற்பாடு செய்யும் வகையில், ஜெனரேட்டர் வசதி செய்து தர வேண்டும். அத்துடன் நாள்தோறும் பயணம் செய்யும் ஏசி பயணிகள் வருகை அதிகரித்து வருவதால், புதியபயணிகள் ஒய்வு அறை கட்டித்தரவேண்டும்.


கும்பகோணத்தில் யாத்ரி நிவாஸ் வேண்டும் - ரயில்வே பயணிகள் வசதி மேம்பாட்டு குழுவிடம் கோரிக்கை

கும்பகோணம் ரயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் கிரி கூறுகையில், கும்பகோணம் ரயில் நிலையத்திலுள்ள பயணிகள் ஒய்வறையை சீர்படுத்த வேண்டும். கும்பகோணத்தில் யாத்திரை நிவாஸ் நிறுவ வேண்டும். பல ஆண்டுகளாக கழிவு நீர் சாக்கடையை பராமரிக்கப்படாததால்,  அதனை நிரந்தரமாக சீர் செய்ய வேண்டும். 2 வது நடை மேடை செல்வதற்கு லிப்ட் வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை  விளக்கி மனுக்களை வழங்கினர்.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
Embed widget