மற்ற நாடுகளுக்காக இந்தியாவில் இருந்து 350 செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டுள்ளது - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்
கணினி புரட்சியை போல வருங்காலங்களில் செயற்கைகோள் மூலம் பல்வேறு பணிகளை செய்ய உள்ளோம்.
மற்ற நாடுகளுக்காக இந்தியாவில் இருந்து சுமார் 350 செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டுள்ளது என்று முன்னாள் சந்திராயன் திட்ட இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க தமிழ்நாடு கிளையின் 45 வது மாநில மாநாடு தஞ்சையில் கடந்த 11ம் தேதி தொடங்கியது. மாநாட்டிற்கு தமிழ்நாடு தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். வருங்கால தலைவர் டாக்டர் கோவிந்தராஜ், செயலாளர் டாக்டர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இந்திய அறுவை சிகிச்சை யூனர்கள் சங்க தலைவர் டாக்டர் சித்தேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் தொடக்க நாள் அன்று பல்வேறு மருத்துவமனைகளில் நடைபெற்ற 15க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நேரடியாக மாநாட்டில் காணொளி காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டு டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டன. இந்த மாநாட்டில் தமிழக மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 1000க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சை நகர அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க நிர்வாகிகள் டாக்டர் இந்தர்ராஜ், மாரிமுத்து, சசி ராஜ், பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இதில் முன்னாள் சந்திராயன் திட்ட இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அறிவியல் தொழில்நுட்பம் எல்லா துறைகளிலும் அதன் பங்களிப்பை செய்து வருகிறார். அந்த வகையில் மருத்துவம், மருத்துவ அறுவை சிகிச்சையும் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்துள்ளது. கத்திரியால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காலத்தில் இருந்து தற்போது இயந்திரம் மூலம் மிக சிறப்பாக அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுகிறது. டாக்டர்கள் அவர்களின் ஆய்வு காலம் முழுவதும் புதியதாக கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
கோவிட் தாக்கத்தில் இருந்து மூன்று ஆண்டுகளில் மீண்டு வருவதற்கு அறிவியல் வளர்ச்சி தான் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அறிவியல் வளர்ச்சி இல்லை என்றால், கோவிட்டில் இருந்து மீள 10 ஆண்டு காலம் ஆகி இருக்கும். உலகளவில், இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்தால், நோய்களும் அதிகரிக்கும் சூழலில், டாக்டர்களின் தேவைகளும் அதிகமாக உள்ளது. மேலும், அறிவியலும் தேவையாக உள்ளது.
உலகளவில் விண்ணுக்கு பல ஆயிரம் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது. நமது நாட்டின் செயற்கைக்கோள் நூற்றுக்கும் மேற்பட்டவை விண்ணுக்கு அனுப்பட்டுள்ளது. மேலும் மற்ற நாடுகளுக்காக இந்தியாவில் இருந்து சுமார் 350 செயற்கைகோள் அனுப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மட்டும் உலகளவில் 3 ஆயிரம் செயற்கைகோள்கள் ஏவப்பட்டுள்ளது. வருங்காலங்களில் அறுவை சிகிச்சையை கூட செயற்கைகோள் வழியாக கண்டறிய முடியும் என்று தெரிவிக்கின்றனர். கணினி புரட்சியை போல வருங்காலங்களில் செயற்கைகோள் மூலம் பல்வேறு பணிகளை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்