மேலும் அறிய

மனைவி உயிரிழப்பு; குழந்தையை விடுதியில் விட்டுவிடு; லவ் டார்ச்சர் செய்த சிறுமியை கொன்ற இளைஞர் பகீர் வாக்குமூலம்

மயிலாடுதுறை அருகே அடையாளம் தெரியாத நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுமி வழக்கில் சிசிடிவி பதிவை கொண்டு குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூர் கிராமத்தில் ரயில்வே தண்டவாளம் அருகே கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் குமாரவேல் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வு செய்து சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்தனர்.


மனைவி உயிரிழப்பு; குழந்தையை விடுதியில் விட்டுவிடு; லவ் டார்ச்சர் செய்த சிறுமியை கொன்ற இளைஞர் பகீர் வாக்குமூலம்

அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் உத்தரவின் பேரில் குற்றவாளியை கண்டுபிடிக்க மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா உள்ளிட்ட 7 பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அடையாளம் தெரியாத இளம்பெண் குறித்து அனைத்து காவல்நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் காவல்துறையினர்  நீடுர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது இறந்து கிடந்த இளம்பெண், ஆண்  ஒருவருடன் செல்வது வீடியோவில் தெரியவந்தது. 


மனைவி உயிரிழப்பு; குழந்தையை விடுதியில் விட்டுவிடு; லவ் டார்ச்சர் செய்த சிறுமியை கொன்ற இளைஞர் பகீர் வாக்குமூலம்

அதனடிப்படையில் கேமரா பதிவில் இருந்த  நீடூர் பி.எம் நகரை சேர்ந்த கூலித் தொழிலாளியான  நாகராஜன் என்பவரின்  மகன் 27 வயதான ஐயப்பன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்த இளம்பெண் 17 வயது சிறுமி என்பதும் கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரிய வந்தது.  திருமணமான ஐய்யப்பன் மனைவி ராதிகா நோய்வாய்ப்பட்டு இறந்த நிலையில் மூன்று வயது மகனுடன் உறவினர் வீட்டில் வசித்து வந்தபோது மயிலாடுதுறை திருவிழந்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம்  பழகி வந்தது தெரிய வந்தது. 9 ம் வகுப்பு வரை படித்துவிட்டு திருப்பூரில் வேலை பார்த்து வந்த சிறுமி சமீபத்தில் ஊருக்கு வந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஐயப்பனை வற்புறுத்தியுள்ளார். தொடர்ந்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி இருவரும் இரவு நீடூர் ரயில்வே தண்டவாளம் அருகே  சந்தித்து பேசியுள்ளனர். 


மனைவி உயிரிழப்பு; குழந்தையை விடுதியில் விட்டுவிடு; லவ் டார்ச்சர் செய்த சிறுமியை கொன்ற இளைஞர் பகீர் வாக்குமூலம்

மகனை விடுதியில் சேர்த்து விட்டு தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஐயப்பனை வற்புறுத்தி ரயில்வே தண்டவாளத்தில் படுத்து சிறுமி மிரட்டல் விடுத்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த ஐயப்பன் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியை கொலை செய்த ஐய்யப்பன் மீது போக்சோ, வன்கொடுமை தடுப்புச் சட்டம்,  கடத்தல் மற்றும் கொலை ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Santhi Soundararajan: தடகள பயிற்சியாளர் சாந்திக்கு மீண்டும் நெருக்கடி..! சர்ச்சையில் விசாரணைக்குழு - வலுக்கும் ஆதரவு குரல்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget