மேலும் அறிய
Advertisement
திருவாரூர் : கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது - அமைச்சர் மெய்யநாதன்
தமிழக முதல்வர் எடுத்திருக்கின்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. மேலும் ஏழு தினங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்தார். திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சாதாரண நோயாளிகள் மற்றும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நபர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிக அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார். மேலும் அந்த உணவினை அமைச்சர் மெய்யநாதனும் பரிசோதித்துப் பார்த்தார் நோயாளிகளுக்கு தரமான உணவை வழங்க வேண்டும் என மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் கேட்டுக்கொண்டார். மேலும் புதியதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளுக்கான பணிகள் நடைபெறுவதை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை அமைச்சர் ஆய்வு செய்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன் பேசியபோது, “தமிழக முதல்வர் எடுத்திருக்கின்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. மேலும் ஏழு தினங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த ஏழு நாட்களுக்குள் முழுவதுமாக கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது கண்டிப்பாக தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்படும்” என்றார்
மேலும் பேசுகையில் ”கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பற்றி ஒரு நாளைக்கு 80 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு அந்த முகாம்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது மத்திய அரசு தொகுப்பிலிருந்து தடுப்பூசிகள் வரவர மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி தமிழக முதல்வர் தடுப்பூசி குறித்து கூறும்போது, மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என தெரிவித்தார். அந்த அடிப்படையில் மக்கள் தாமாகவே முன்வந்து மருத்துவமனைகள் மற்றும் தடுப்பூசி முகாம்களில் தங்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது” என்றார்
இந்த ஆய்வுப் பணியின்போது அமைச்சர் மெய்யநாதன் உடன் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் மருத்துவ கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விழுப்புரம்
தமிழ்நாடு
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion