மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Maharashtra Crane Accident: மஹாராஷ்டிரா கிரேன் விபத்தில் நாகை இளைஞர் உயிரிழப்பு; சடலத்தை கொண்டு வர அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை
இதுவரை எந்தவித பதிலும் சொல்லாமல் அலட்சியம் காட்டும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்த பொறியாளரின் உறவினர்கள் கோரிக்கை.
மஹாராஷ்டிரா மாநில கிரேன் விபத்தில் உயிரிழந்த நாகை இளைஞரின் சடலத்தை மீட்டுத்தர தமிழக அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவின் ஷாஹாபூரி என்ற இடத்தில் மும்பை - நாக்பூரை இணைக்கும் சம்ருதி அதிவிரைவுச் சாலையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த ராட்சத கிரேன் ஒன்று உடைந்து விழுந்து விபத்துக்குள்ளாகி விபத்தில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த இரண்டு நபர்களில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் பகுதியை சேர்ந்தவர் வேதரத்தினம்.
இவரது மகன் கண்ணன். இவர் சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு, மகாராஷ்டிரா மாநிலத்தில் தானேவில் விஎஸ்எல் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தானேவில் பாலம் கட்டுமானப்பணியின்போது கிரேன் விபத்தில் சிக்கி நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள ஆயக்காரன்புலம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் உயிரிழந்தார். இந்த நிலையில் VLS தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த கண்ணனின் சடலத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும் இதுவரை எந்தவித பதிலும் சொல்லாமல் அலட்சியம் காட்டும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், என உயிரிழந்த பொறியாளரின் உறவினர்கள் நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீசை சந்தித்து புகார் மனு அளித்தனர். மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து வறுமையின் காரணமாக வேலைக்கு சென்று மஹாராஷ்டிரா மாநிலத்தில் உயிரிழந்த கண்ணன் குடும்பத்திற்கு சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் இருந்து உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் தமிழக அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
இந்தியா
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion