மேலும் அறிய

"உயிர் காத்த மனிதாபிமானம்: தஞ்சையில் நெகிழ்ச்சியான மீட்புப் பணி!"

மிருக வதை தடுப்பு சங்கத்தினர் எம்சாண்ட் மணலில் சிக்கிய நாய்குட்டியை முதலில் ஆசுவாசப்படுத்தும் விதமாக நடந்து கொண்டனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் எம்சாண்ட் மணலில் சிக்கிக் கொண்டு தவித்த நாய்குட்டியை பத்திரமாக தஞ்சாவூர் மாவட்ட மிருகவதை தடுப்பு சங்கத்தினர் மீட்டனர்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை, பிரபாநகர் விரிவாக்கம் பகுதியில் வீடு ஒன்று கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.  வீடு கட்டுவதற்காக வீட்டின் உரிமையாளர் எம்சாண்ட் மணலை கொண்டு வந்து கொட்டி வைத்துள்ளார். இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள தெருநாய்குட்டி ஒன்று எம்சாண்ட் மணலில் படுந்திருந்தபோது, மணல் சரிந்து நாய்குட்டி மேல் விழுந்துள்ளது.


இதில் கழுத்து வரை நாய்குட்டி புதைந்த நிலையில், காலை முதல் குரைத்து கொண்டே இருந்தது. உடலை அசைக்க முடியாமல் தவித்த அந்த நாய்குட்டியை மீட்பதற்கு மக்கள் நினைத்தாலும் அருகில் சென்றால் கடித்துவிடுமோ என அச்சப்பட்டனர். காப்பாற்ற வருகிறார்கள் என்று தெரியாமல் அந்த நாய்குட்டி கடித்து விட்டால் என்ன செய்வது என்பதால் பொதுமக்களும் தவித்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக  அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அறக்கட்டளையினர் உடனடியாக தஞ்சாவூர் மிருகவதை தடுப்பு சங்கத்துக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மிருக வதை தடுப்பு சங்கத்தினர் எம்சாண்ட் மணலில் சிக்கிய நாய்குட்டியை முதலில் ஆசுவாசப்படுத்தும் விதமாக நடந்து கொண்டனர். பின்னர் அதை  பத்திரமாக மீட்பு குழுவினர் மீட்டனர். தன்னை மீட்ட மீட்புக்குழுவினரை அந்த நாய்க்குட்டி நன்றியுடன் பார்த்துவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. 

காலை முதல் எம்சாண்ட் மணலில் சிக்கி கொண்டு தவித்த நாய்குட்டியை மீட்ட மீட்பு குழுவினருக்கு அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர். வாயில்லா ஜீவனைக் காப்பாற்றிய SPCA குழுவினரின் இந்த மனிதாபிமானச் செயல் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

தலைப்பு செய்திகள்

திருவையாறு அருகே குளம் அமைக்க பள்ளம் தோண்டியபோது அதிர்ச்சி: 2 கற்சிலைகள் கண்டெடுப்பு
திருவையாறு அருகே குளம் அமைக்க பள்ளம் தோண்டியபோது அதிர்ச்சி: 2 கற்சிலைகள் கண்டெடுப்பு
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
60 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து கும்பகோணம் வந்த திருமங்கை ஆழ்வார் சிலை
60 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து கும்பகோணம் வந்த திருமங்கை ஆழ்வார் சிலை
இலுப்பையடி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பு சொத்து மீட்பு
இலுப்பையடி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பு சொத்து மீட்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Embed widget