மேலும் அறிய

மறுபடியும் உதிப்போம்!" - தி.மு.க தொண்டர்களை உற்சாகப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்

கலைஞர்  சொன்ன மாதிரி, திராவிட முன்னேற்றக் கழகம் வெறும் அரசியல் இயக்கம் கிடையாது, வெறும் ஒரு கட்சி கிடையாது. அது ஒரு சமுதாய இயக்கம். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது எல்லாம் சகஜம்.

தஞ்சாவூர்: சூரியன் ஒருபோதும் மறையாது, அது மறுபடியும் உதிக்கும். அதன் ஒளியில் தமிழ்நாடு மீண்டும் செழிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

திருவாரூர் எம்எல்ஏவும் மாவட்ட செயலாளருமான கலைவாணன் இந்த திருமண விழா நேற்று நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தலைமை ஏற்று திருமணத்தை நடத்தி மணமக்களை வாழ்த்தினார்.

திருமண விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, நம்முடைய தலைவர் கலந்து கொள்கின்ற முதல் நிகழ்ச்சி, முதல் பொது நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி. மறைந்த  பூண்டி கலைச்செல்வனின் அன்பு மகள் டாக்டர் மருத்துவர் கலை அழகி, மருத்துவர் டாக்டர் ராம் பாலாஜி இணையருடைய இந்தத் திருமண நிகழ்ச்சி இன்றைக்கு ஒரு சாதாரண திருமண நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், நம்முடைய கழகத்துடைய நிகழ்ச்சியாக மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மணமகள் திருவாரூர் மாவட்டம், மணமகன் திருச்சி மாவட்டம், திருமணம் நடைபெறுகின்ற இந்த இடம் தஞ்சாவூர் மாவட்டம். மொத்தத்தில் ஒட்டுமொத்த டெல்டா மாவட்டமும் சேர்ந்து ஒரு கூட்டணி அமைத்து இந்த திருமண நிகழ்ச்சியை நடத்தி கொண்டு இருக்கிறது. யார் எந்த பக்கம் போனாலும், எந்த மாவட்டம் எந்த முடிவு எடுத்தாலும், டெல்டா எப்பொழுதுமே திராவிட முன்னேற்றக் கழகம் பக்கம்தான் என்பதை நிரூபித்து காட்டிய அத்தனை பேருக்கும் முதலில் என்னுடைய நன்றியை தெரிவிச்சுக்கிறேன்.

திருவாரூர் மாவட்டத்தில் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் வளர்வதற்கு ஸ்ட்ராங்கான அந்த பேஸ்மென்ட்டை போட்டவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் தான். அவரை நீங்கள்  என்றைக்கும் விட்டுக் கொடுக்க  மாட்டீர்கள். திருவாரூர் மாவட்டம் மட்டும் இல்லை, ஒட்டுமொத்த டெல்டாவுமே  இன்றைக்கு கழகத்துடைய கோட்டையாகத் தான் விளங்கி கொண்டிருக்கிறது. 

கழகம் எவ்வளவு பெரிய புயலைச் சந்தித்தாலும் நாம் திரும்பத் திரும்ப மீண்டும்  எந்திரித்து வந்துகிட்டு இருக்கிறோம். இந்தத் திருமணத்தில் இருக்கக்கூடிய எழுச்சியையும் உங்களுடைய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பார்க்கும்போது நிச்சயம் தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வெற்றி வாகை சூடும்  என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் கிடையாது.

கலைஞர்  சொன்ன மாதிரி, திராவிட முன்னேற்றக் கழகம் வெறும் அரசியல் இயக்கம் கிடையாது, வெறும் ஒரு கட்சி கிடையாது. அது ஒரு சமுதாய இயக்கம். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது எல்லாம் சகஜம். மற்ற கட்சிகளைத்தான் அதெல்லாம் பாதிக்கும். திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் போல் மக்கள் பணிகளைத் தொடர்ந்து  செய்து கொண்டு தான் இருக்கும். 

ஒரே வரியில  சொல்ல வேண்டுமென்றால், தேர்தல் அரசியலில் தான் நாம் தோற்றிருக்கோமே தவிர, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கோமே தவிர, கொள்கை அரசியல் என்றைக்குமே  தோற்றது கிடையாது, தோற்கவும் மாட்டோம். ஆளுங்கட்சியாக  இருந்தபோது மட்டும்  இல்லாமல், எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் நமக்கும், நமக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாமல், வாக்களிக்காம போன மக்களுக்கும் சேர்த்தே நம்முடைய தலைவர் எப்போதும் சொல்வது போல நாம் உழைப்போம். தமிழ்நாட்டுக்கு வருகின்ற ஆபத்துகளை எல்லாம் நிச்சயம் தடுத்து நிறுத்துவோம். மாநில உரிமைகளை நிச்சயம் காப்போம். இப்பவே இந்த பத்து நாட்களிலேயே மக்கள், பெண்கள், இளைஞர்கள், இந்த ஆட்சியுடைய உண்மையான முகத்தை உணர்ந்திருப்பார்கள். 

கலைஞர்  சொன்ன ஒரு உதாரணத்தை இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன். தாயின் பாதுகாப்பில் இருக்கக்கூடிய ஒரு குழந்தை, கிலுகிலுப்பை ஆட்டி விளையாட்டு  காமிக்கும் ஒரு ஆளைப் பார்த்து நிச்சயம் மயங்கும், மகிழ்ச்சியடையும். தாயிடம் இருந்து தாவி அந்த கிலுகிலுப்பை ஆட்டுபவரிடம் கொஞ்ச நேரம் போய் உக்காந்துக்கும். ஆனா அந்தக் குழந்தை கிலுகிலுப்பை காட்டுறவன்கிட்ட நிரந்தரமா இருந்திடாது. சற்று நேரத்துக்குப் பிறகு அதுக்கு உண்மையான பாசம் என்ன என்று தெரியும். தாயோட முகத்தை நிச்சயம் தேடிப் பார்க்கும். தாய்கிட்டத்தான் மீண்டும் திரும்பி வரும்.

அது மாதிரி இப்போது கவர்ச்சி, மாயாஜாலத்தைக் காட்டி மக்களைச் சிலர் ஈர்த்திருக்காங்க. இந்த கவர்ச்சி மக்களுடைய கஷ்டத்தைப் போக்காது. அடிப்படைப் பணிகளை  நிறைவேற்றாது. எந்தப் பிரச்சினைக்கும் அது தீர்வு காணாது. எனவே தாயோட அன்புக்கு ஈடாக எதுவும் இல்லை என்று  அந்தக் குழந்தை மீண்டும் உணர்ந்து, தமிழ்நாட்டுக்குத் தாயாக இருக்கக்கூடிய நம்முடைய கழகத்தை,  தலைவரை நோக்கி நிச்சயம் அந்தக் குழந்தை விரைவில் வரும்.  தலைவர்  சொன்னது போல் சூரியன் ஒருபோதும் மறையாது, அது மறுபடியும் உதிக்கும். அதன் ஒளியில் தமிழ்நாடு மீண்டும் செழிக்கும் என்று சொல்லி மணமக்களுக்கு மீண்டும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து விடைபெறுகின்றேன். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில்  பொருளாளர் டி. ஆர். பாலு, கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர்கள் கே..என். நேரு, பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, சிவசங்கர், ரகுபதி, மெய்யநாதன், அன்பில் மகேஷ், டி. ஆர் பி ராஜா, கோவி செழியன், எம்பிக்கள் ஆர் ராசா, முரசொலி, அருண் நேரு, கல்யாணசுந்தரம், செல்வராஜ், எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகர், வைத்திலிங்கம், அசோக்குமார், அண்ணாதுரை, முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பழகன், டி.கே.ஜி. நீலமேகம், எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் முபாரக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
Embed widget