மேலும் அறிய

பொறியியல் பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் வாய்ப்பு! வாக்குப்பதிவு இயந்திரம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை! உடனே விண்ணப்பியுங்கள்

ஒப்பந்த முறையில் 4 வருடத்திற்கு பணிபுரிய மொத்தம் 160 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பல்துறைகளில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் பட்டதாரிகளுக்கு வாக்குபதிவு இயந்திரம் தயாரிக்கும் நிறுவனத்தில் 160 காலிப்பணியிடங்கள் நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உடனே தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் விண்ணப்பத்தை அனுப்பி பயன் அடையுங்கள்.

மத்திய அரசின் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. அணு, பாதுகாப்பு, ஏரோஸ்பேஸ், தகவல் தொழில்நுட்பம், டெலிகாம் உள்ளிட்ட பல்துறைகளில் எலெக்ட்ரானிக் உலகில் முதன்மை நிறுவனமான செயல்படும் இங்கு மொத்தம் 160 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் பணி செய்ய ஜாக்பாட் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் பல்துறைகளில் எலெக்ட்ரானிக் கருவிகளை உருவாக்கி தரும் நிறுவனமான எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டெக்னிக்கல் அதிகாரி பதவிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஒப்பந்த முறையில் 4 வருடத்திற்கு பணிபுரிய மொத்தம் 160 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பல்துறைகளில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

டெக்னிக்கல் அதிகாரி (Technical Officer-C) 160

இவை பொதுப் பிரிவில் - 65, பொருளாதாரத்தின் பின்தங்கியவர்கள் - 16, ஒபிசி - 43, எஸ்சி - 24 மற்றும் எஸ்டி - 12 என நிரப்பப்படுகிறது.

மத்திய அரசின் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், அணுசக்தி துறையின் கீழ் செயல்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்பு துறை, ஏரோஸ்பேஸ், ஐடி, நெட்வொர்க் மற்றும் பாதுகாப்பு, டெலிகாம், இ-கவர்னஸ், தேர்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தேவையான நவீன தொழில்நுட்ப எலெக்ட்ரானிக் இயந்திரங்கள் உருவாக்கி வருகிறது. குறிப்பாக தேர்தலில் உபயோகிக்கும் மின்னணு வாக்குபதிவு இயந்திரம் இந்நிறுவனம் மூலம் தயாரிக்கப்படுகிறது.

இந்நிறுவனத்தில் உள்ள டெக்னிக்கல் அதிகாரி பதவிக்கு எலெக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ், EEE, ETC, E&I, எலெக்ட்ரிக்கல், கணினி அறிவியல் பொறியியல், தகவல் தொழில்நுட்ப பொறியியல் மற்றும் மெக்கானிக்கல் ஆகியவற்றில் 60 சதவீத மதிப்பெண்களுடன் BE/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பதாரர்கள் துறை சார்ந்து 1 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 1 வருட தொழிற்பயிற்சியும் அனுபவமாக கணக்கிடப்படும்.

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகப்படியாக 30 வயது வரை இருக்கலாம். ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் தளர்வு உள்ளது.

இப்பதவிக்கு தேர்வுச் செய்யப்படும் நபர்களுக்கு முதல் வருடம் மாதம் ரூ.25,000 வழங்கப்படும். இரண்டாம் வருடம் ரூ.28,000, மூன்று மற்றும் நான்காம் வருடம் மாதம் ரூ.31,000 வழங்கப்படும்.

இப்பணியிடங்களுக்கு ஒப்பந்த முறையில் நிரப்பப்படுவதால் எழுத்துத் தேர்வு கிடையாது. விண்ணப்பதாரர்களில் இருந்து மதிப்பெண்கள் அடிப்படையில் 4இல் இருந்து 1 என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள். 10-ம் வகுப்பு மதிப்பெண் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்டவர் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணல் ஹைதராபாத்தில் நடைபெறும். பணி நியமனமும் ஹைதராபாத்தில் வழங்கப்படும். கல்வித்தகுதி - 20%, பணி அனுபவம் - 30% மற்றும் நேர்காணல் 50% என்ற அடிப்படையில் இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.

ஆர்வமுள்ளவர்கள், பொறியாளர்கள் https://www.ecil.co.in/ என்ற நிறுவனத்தின் இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. இந்த பணிக்கான விண்ணப்பம் கடந்த 16.09.2025ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 22.09.2025 தேதி ஆகும். நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
CM Stalin Slams BJP: “புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மையை கெடுக்கிறது பாஜக அரசு“; முதலமைச்சர் ஸ்டாலின் விளாசல்
“புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மையை கெடுக்கிறது பாஜக அரசு“; முதலமைச்சர் ஸ்டாலின் விளாசல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
CM Stalin Slams BJP: “புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மையை கெடுக்கிறது பாஜக அரசு“; முதலமைச்சர் ஸ்டாலின் விளாசல்
“புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மையை கெடுக்கிறது பாஜக அரசு“; முதலமைச்சர் ஸ்டாலின் விளாசல்
TN Weather Report: சென்னை உள்பட தமிழ்நாட்டில் நாளையும் மழை; அடுத்த 6 நாட்களுக்கு எப்படி.? வானிலை மைய அப்டேட்
சென்னை உள்பட தமிழ்நாட்டில் நாளையும் மழை; அடுத்த 6 நாட்களுக்கு எப்படி.? வானிலை மைய அப்டேட்
புதுச்சேரி வாக்காளர் பட்டியல்: 85,531 பேர் நீக்கம்! உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியல்: 85,531 பேர் நீக்கம்! உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!
Tata Sierra vs Hyundai Creta: புதிய டாடா சியராவா.? ஹூண்டாய் க்ரெட்டாவா.? வாங்குவதற்கு எது சிறந்தது? வாங்க பார்க்கலாம்
புதிய டாடா சியராவா.? ஹூண்டாய் க்ரெட்டாவா.? வாங்குவதற்கு எது சிறந்தது? வாங்க பார்க்கலாம்
Statue of Liberty: ஒரு காத்துக்கு தாங்குதா? - பிரேசிலில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!
Statue of Liberty: ஒரு காத்துக்கு தாங்குதா? - பிரேசிலில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!
Embed widget