மேலும் அறிய

அதிகாலை முதல் தஞ்சை மாவட்டத்தில் கனமழை...நாளைக்கு?

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் டெல்டா மாவட்டங்களில்  கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.  

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டிருந்தார். தஞ்சாவூர் மாநகரம் மற்றும் சுற்றுப்பகுதியில் அதிகாலை முதல் மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. 

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் டெல்டா மாவட்டங்களில்  கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.  இந்நிலையில் தஞ்சை நகர் பகுதிகளில் நேற்று காலை 9 மணி முதல் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். 

இதே போல் அம்மாபேட்டை, சாலியமங்கலம், பாபநாசம், வல்லம், செங்கிப்பட்டி, கும்பகோணம், அய்யம்பேட்டை, திருவையாறு, கண்டியூர், பள்ளி அக்ரஹாரம் என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி சாகுபடி நடந்து வருகிறது.

இதில் சம்பா பயிர்கள் 100 நாட்களை கடந்து கதிர் வரும் நிலையில் உள்ளது இந்த மழை இந்த பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் மழை தொடர்ந்தால் பூக்கள் உதிர்ந்து மகசூல் பாதிக்கப்படும் என விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

கடந்த பெஞ்சல் புயலின் போது தஞ்சை மாவட்டம் முழுவதும் பெய்த மழை சம்பா சாகுபடி பயிர்களுக்கு உதவிகரமாக இருந்தது. இருப்பினும் இளம் தாளடி பயிர்கள் மழையில் மூழ்கி சேதம் அடைந்தது. அதேபோல் தற்போது பல பகுதிகளில் தாளடி நாற்று நடும் பணிகள் நடந்து வருகிறது. மழைத் தொடர்ந்தால் இந்த இளம் தாளடி பயிர்களும் சேதம் அடையும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று  அதிகாலை முதல் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில் கனமழை அறிவிப்பால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். அதிகாலை முதல் பெய்து வரும் மழையால் பல கிராமங்களில் மின்தடையும் ஏற்பட்டது_ இதனால் பணிக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தஞ்சையில் நேற்று முதல் பெய்து வரும் மழையால் தாழ்வான மழை நீர் தேங்கியது. மழையின் காரணமாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் சிரம்த்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது

தலைப்பு செய்திகள்

பிரமாண்ட மறுதிறப்பு... தஞ்சை ஜோய் ஆலுக்காஸ் வழங்கும் அட்டகாசமான சிறப்பு சலுகைகள்
பிரமாண்ட மறுதிறப்பு... தஞ்சை ஜோய் ஆலுக்காஸ் வழங்கும் அட்டகாசமான சிறப்பு சலுகைகள்
சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்... விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தல்
சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்... விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தல்
மண்டையோட்டின் அடிப்பகுதியில் இருந்த அரிதான கட்டி... தஞ்சை மீனாட்சி மருத்துவமனை டாக்டர்கள் அகற்றி சாதனை
மண்டையோட்டின் அடிப்பகுதியில் இருந்த அரிதான கட்டி... தஞ்சை மீனாட்சி மருத்துவமனை டாக்டர்கள் அகற்றி சாதனை
காவல் துறையில் களையெடுப்பு... இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 போலீசார் சஸ்பெண்ட்: பின்னணி என்ன?
காவல் துறையில் களையெடுப்பு... இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 போலீசார் சஸ்பெண்ட்: பின்னணி என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget