மேலும் அறிய

அருமையான சம்பளத்தில் சூப்பரான வேலை வாய்ப்பு... விபரங்கள் உள்ளே!!!

சென்னையில் மத்திய அரசு வேலையைத் தேடும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு வந்திருக்கு. அது உங்களுக்காக காத்திருக்கு.

தஞ்சாவூர்: தேர்வு கிடையாது. மெரிட் நேர்காணல் மட்டும்தாங்க. சென்னை ஆவடியில் அட்டகாசமான ரூ.40,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை உங்களுக்காக காத்திருக்கு. முழு விபரமும் உள்ளே.

சென்னையில் மத்திய அரசு வேலையைத் தேடும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு வந்திருக்கு. அது உங்களுக்காக காத்திருக்கு. சென்னை, ஆவடியில் அமைந்துள்ள மத்திய அரசின் பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான எஞ்சின் தொழிற்சாலையில் தேர்வு இல்லாமல், நேர்காணல் மற்றும் மெரிட் லிஸ்ட் அடிப்படையில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

இந்த தொழிற்சாலையில் ஜூனியர் மேனேஜர் மற்றும் அசிஸ்டன்ட் மேனேஜர் என மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு அட்டகாசமான சம்பளம்.

ஜூனியர் மேனேஜர் (Junior Manager): மொத்தம் 13 காலியிடங்கள். மாதம் ரூ.30,000/- சம்பளம் வழங்கப்படும்.

அசிஸ்டன்ட் மேனேஜர் (Assistant Manager): மொத்தம் 7 காலியிடங்கள். மாதம் ரூ.40,000/- சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சமாக 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, SC/ST, OBC மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிப்ளமோ, இளங்கலைப் பொறியியல் (B.E/B.Tech), MBA அல்லது LLB போன்ற படிப்புகளை முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எழுத்துத் தேர்வு எதுவும் கிடையாது என்பது ஒரு மிகப்பெரிய சிறப்பம்சமாகும். விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ஒரு மெரிட் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பெண்கள், SC/ST பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.300/- கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.ddpdoo.gov.in அல்லது www.avnl.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் டவுன்லோடு செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களின் சுய சான்றொப்பமிடப்பட்ட நகல்களை இணைக்க வேண்டும். பின்பு, விண்ணப்பக் கட்டணத்துடன் (தேவைப்பட்டால்) விண்ணப்பத்தை சாதாரண தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: தலைமைப் பொது மேலாளர், இயந்திர தொழிற்சாலை, ஆவடி, சென்னை - 600 054. (The Chief General Manager, Engine Factory, Avadi, Chennai – 600 054 ) என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கடித உறையின் மேல் "Name of the Post applied for" என்று விண்ணப்பிக்கும் பதவியின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 11.10.2025.  விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.10.2025

தகுதியான நபர்கள் கடைசி தேதி வரை காத்திருக்காமல், உடனடியாக விண்ணப்பித்து மத்திய அரசு வேலையைப் பெறும் இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிட்டு வருத்தப்படாதீங்க. விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து உறுதி செய்து கொள்ள வேண்டியதும் மிக முக்கியம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget