மேலும் அறிய
தமிழக அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 திரும்ப பெற வேண்டும் - மன்னார்குடியில் விவசாயிகள் உண்ணாவிரதம்
நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 நிறைவேற்றப்பட்டால் நீர் நிலைகளில் உள்ளாட்சித் துறைக்கு இருக்கிற அதிகாரம் முற்றிலும் பறிக்கப்படும்.
தமிழக அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 திரும்ப பெற வேண்டும் என்றும் வடசேரி நிலக்கரி எடுக்கும் திட்டத்தை திரும்பப்பெறும் அறிவிப்பானை மத்திய அரசு வெளியிட வலியுறுத்தியும் மன்னார்குடியில் பிஆர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கடந்த 2022 ஜூலை மாதம் இந்தியாவில் 116 இடங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டு அதற்கான டெண்டரை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் துவக்கி வைத்தார்கள். படிப்படியாக டெண்டர் கோரப்பட்டது. மூன்று முறை வடசேரி டெண்டர் கோரப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அதற்கான டெண்டர் விடுகிற பட்டியலை மத்திய அரசு அறிவித்தது. அதனை எதிர்த்து கடந்த ஏப்ரல் 4ம் தேதி உள்ளிக்கோட்டையில் மத்திய அரசின் அரசாணையையும், டெண்டர் நோட்டீசும் தீயிட்டு கொளுத்தி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியதோடு, மறுநாள் ஏப்ரல் 5ம் தேதி சட்டமன்றத்தில் கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு அனைத்து கட்சிகளும் இத்திட்டத்திற்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் வடசேரி மைக்கேல் பட்டி, சேத்தியாதோப்பு கிழக்கு ஆகிய மூன்று கிணறுகள் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வருவதாகவும் விவசாயிகளுக்கு பேரழிவு ஏற்படுத்தும் என அத்திட்டத்திற்கான டெண்டர் கோரும் பட்டியலில் இருந்து விளக்கப்படுவதாகவும் மத்திய அமைச்சர் அறிவித்தார். தொடர்ந்து அதனை கைவிடுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில் இதுவரையிலும் அதற்கான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை டெண்டர் பட்டியலிலும் இந்த மூன்று கிணறுகளுக்கான அறிவிப்புகள் தொடர்கிறது. எனவே உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசை வலியுறுத்தி அழுத்தம் கொடுத்து டெண்டர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யவும்,கொள்கை பூர்வமாக மத்திய அரசு கைவிடுகிற அறிவிப்பாணையை பெற்று காவிரி டெல்டா விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் மத்திய அரசு ஒப்புக்கொண்ட அடிப்படையில் திட்டத்தை கைவிட முன்வர வேண்டும்.
மேலும் தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 என்ற பேரில் விளைநிலங்களை கார்ப்பரேட்டுகள அபகரித்துக் கொள்ளவும் ஏரி குளம் குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகளை தன் விருப்பத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஒரு சட்டத்தை கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் இறுதி நாளில் எந்த விதமான விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் நீர் நிலைகளில் உள்ளாட்சித் துறைக்கு இருக்கிற அதிகாரம் முற்றிலும் பறிக்கப்படும். கார்ப்பரேட் நிறுவனங்கள் 100 ஏக்கருக்கு மேல் நிலத்தை வாங்கி விவசாயிகள் ஒப்புதல் இல்லாமலேயே கைப்பற்றுவதற்கு அனுமதி அளிக்கிறது. அந்த நிலம் வாங்குகிற இடத்தில் இருக்கிற ஏரிகளை பயன்படுத்திக் கொள்ளவும் இச்சட்டம் வழிவகுக்கிறது. நீர்வழிப்பாதைகள் நீர்நிலைகளில் சாலைகள் அமைத்துக் கொள்ளவும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் மேற்கொள்ள உள்ள தொழிற்சாலைகளுக்கு எந்த இடையூறும் இல்லாத வகையில் பயன்படுத்திக்கொள்ள இச்சட்டம் வழிவகுக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு இருக்கிற வழிகாட்டு நெறிமுறைகள் முற்றிலும் அபகரிக்கப்படுகிறது.
மேலும் இந்த திட்டம் குறித்து விவசாயிகளோ பொதுமக்களோ எதிர்ப்பு தெரிவித்தால் அதனை ஆய்வு செய்து அந்நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இவற்றில் மூன்று பேர் அரசுத்துறை உயர் அலுவலர்கள் இரண்டு பேர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடம் பெறுவார்கள் என்று அரசு சொன்னதோடு இக்குழு உறுப்பினர்கள் முழுமையும் அரசே நியமனச் செய்யும். அவ்வாறு நியமனம் செய்யப்படும் குழு இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்து அனுமதி அளிக்க முன்வரும் அப்படி ஏதேனும் இடையூறுகள் இருக்குமேயானால் அதை சரி செய்து ஒப்பந்த படி அந்த நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்கிற பரிந்துரைகளை மட்டுமே இந்த குழுவால் அனுமதிக்கப்படுகிறது. எந்த இடத்திலும் இந்த குழு பாதிப்பு அறிந்து ரத்து செய்வதற்கான அதிகாரம் வழங்கப்படவில்லை
எனவே ஒட்டுமொத்த தமிழ்நாடு நீர் நிலைகளும் விளை நிலங்களும் கார்ப்பரேட்டுகளுக்கு எந்த தடையும் இல்லாமல் அபகரித்துக் கொள்கிற ஒரு மிக மோசமான சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே உடனடியாக இச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி மன்னார்குடியில் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion