தஞ்சையில் நடந்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்
தொற்றாநோய்கள் திட்டம் உட்பட பல திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அவற்றின் களப்பணிகளை நல்லமுறையில் செயல்படுத்தப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் குழுத் தலைவர் மற்றும் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் முன்னிலை வகித்தார். இதில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் பேசியதாவது:-
தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கண்காணிக்கும் பொருட்டு மாவட்டந்தோறும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தை நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் இன்று இந்தக் குழு கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட தொழில் பயிற்சி மையம், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, மின்சார வாரியம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு நகர் புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பேருராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி, சுகாதாரத்துறை, மாவட்டதொழில் மையம், மாவட்ட உணவு பொருள் வழங்கல், சமூக பாதுகாப்புத் திட்டம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை, சத்துணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மறுவாழ்வு நலத்துறை, நிலஅளவை பதிவேடுகள் துறை, குடிநீர் வடிகால் வாரியம், டிஜிட்டல் இந்தியா, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பாரத் சன்சார் நிகாம் லிமிடெட் ஆகிய துறைகளின் பணிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், புதிய அரசு திட்டங்களான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், தூய்மை இந்தியா இயக்கம், தேசிய ரூர்பன் இயக்கம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரி கிராம முன்னோடி திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், தெற்கு இரயில்வேதுறை, தேசியநெடுஞ்சாலைத்துறை, பாரத் சன்சார் நிகாம் லிமிடெட், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டங்கள். மாவட்ட திறன் பயிற்சி திட்டம், வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், விதை கிராமதிட்டம், பள்ளிக் கல்விதுறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மாற்றுதிறனாளிகள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், குடிசை மாற்று வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் மூலம் செயல்படுத்தப்படும் புராதன நகர வளர்ச்சிதிட்டம், அம்ரூ
ஆய்வில் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து பணிகளையும் விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் எம்.பி., பழநிமணிக்கம் தெரிவித்தார்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடுஉரிமைகள் திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகதரவுகள் கணக்கெடுப்பு குறித்த பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்களை எம்.பி., வெளியிட மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பெற்றுக் கொண்டார்.
கூட்டத்தில் சட்டமன்றஉறுப்பினர்கள் டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்),திரு.என்.அசோக் குமார் (பேராவூரணி), மாநகராட்சிமேயர்கள் சண் சண்.ராமநாதன் (தஞ்சாவூர்), சரவணன் (கும்பகோணம்),கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாவட்டவருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணைமேயர் மருத்துவர்.அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்), மாநகராட்சி ஆணையர்கள், அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.