மேலும் அறிய

தமிழக அரசு சூப்பர்... புகழாரம் சூட்டினார் தருமை ஆதீனம்

தற்போது உள்ள அரசு ஆன்மீக அரசு. அனைத்து முகூர்த்த நாட்களிலும் கும்பாபிஷேகங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். திருப்பணிகளை விரைந்து செய்து, அதிகளவில் கும்பாபிஷேகம் செய்வதை சாதனையாக கருதுகிறேன். 

தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039வது சதய விழாவை ஒட்டி அரசு சார்பில் ராஜராஜன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பங்கேற்ற தருமை ஆதீனம் தமிழக அரசு செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039வது சதய விழா நேற்று முன்தினம் காலை மங்கல இசையுடன் துவங்கியது.  தொடர்ந்து கருத்தரங்கம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் பெருவுடையார் பெரிய நாயகி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நேற்று இரவு 700 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து சதய விழாவின், முக்கிய நிகழ்வாக மறுநாள் காலை கோயிலில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. பிறகு, திருமுறை நூலை யானை மீது வைத்து 100க்கும் அதிகமான ஓதுவாமூர்த்திகளுடன் ராஜ வீதிகளில் வீதியுலா நடந்தது.

தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில்,ராஜராஜ சோழன் சிலைக்கு தஞ்சாவூர் எம்பி முரசொலி,கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மேயர் சண்.ராமநாதன், அரண்மனை தேவஸ்தான அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழக அரசு சூப்பர்... புகழாரம் சூட்டினார் தருமை ஆதீனம்

பிறகு, தருமை ஆதீனம் நிருபர்களிடம் கூறியதாவது: ராஜராஜ சோழனின் 1039 வது சதய விழா சிறப்பாக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த இத்திருக்கோவில் மிக புண்ணியம் பெற்றது. திருவிசைப்பா பாடல் பெற்ற தலம். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் ஏற்ப நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரிய கோவிலின் கட்டுமானம் குறித்து உலக அளவிலான ஆய்வாளர்கள் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சாதனையாக ராஜராஜ சோழன் செய்துள்ளார். விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போவதில்லை என்பதற்கு உதாரணமாக ராஜராஜ சோழன் விளங்கினார். 

உலகம் முழுவதும் சென்று தனது வீரத்தை பறைசாற்றி .நமக்கு திருமுறையை மீட்டுக் கொடுத்தவர். திருச்சி உய்யகொண்டான் மலையில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதற்கு  அனைத்து ஆதீனங்களும் வருகிறார்கள். அப்போது சூரியனார் கோவில் ஆதீனம் திருமணம் தொடர்பாக பேசி முடிவெடுக்க உள்ளோம். தற்போது உள்ள அரசு ஆன்மீக அரசு. அனைத்து முகூர்த்த நாட்களிலும் கும்பாபிஷேகங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். திருப்பணிகளை விரைந்து செய்து, அதிகளவில் கும்பாபிஷேகம் செய்வதை சாதனையாக கருதுகிறேன். 

தமிழகத்தில் பெரிய கோவில்கள் மட்டுமின்றி, சிறிய கோவில்களுக்கும் கும்பாபிஷேகத்தை இந்த அரசு நடத்துவது சாதனையாக பார்க்கிறேன். பெரிய கோவில்களை காட்டிலும், கிராம கோவில்களின் உண்டியல் வருமானம் அதிக அளவில் உள்ளது. கிராம கோவில்களை யாரும் பராமரிக்காமல் சென்று விடக்கூடாது என்பதற்காக, அந்தப் கோவில்களுக்கு அரசு தனிக்கவனம் செலுத்துகிறது. இந்த அரசு கோவில் சொத்துகளை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக திருச்செந்தூரில் ஆதீனத்திற்கு சொந்தமான 400 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள், திருச்சியில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Embed widget