Cyclone Mandous: மயிலாடுதுறையில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சோகம்
மயிலாடுதுறை அருகே வயலில் அருந்து கிடந்த மின்கம்பியை மிதித்து உயிருக்கு போராடிய பெரியம்மாவை காப்பாற்ற சென்ற 11 -ம் வகுப்பு மாணவன் உட்பட இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வழுவூர் ஊராட்சி பெரியேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் என்பவரின் 45 வயதான மகள் சந்திரா. திருமணமாகாத இவரும், தனது தங்கை மகன், 11 -ம் வகுப்பு படிக்கும் மணிகண்டன் ஆகியோர் இருவரும், அதே பகுதியை சேர்ந்த இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில் மேய்ந்து கொண்டிருந்த அவர்களின் ஆட்டை ஓட்டச் சென்றுள்ளார்.
அப்போது மாண்டஸ் புயல் காற்றின் காரணமாக அறுந்து விழுந்து கிடந்த மோட்டாருக்கு செல்லும் மின்சார கம்பியை எதிர்பாராத விதமாக சந்திரா தெரியாமல் மிதித்து உள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து சந்திரா உயிருக்கு போராடியுள்ளார். இதனை கண்ட மணிகண்டன் தனது பெரியம்மாவை காப்பாற்ற முயற்சித்துள்ளார். அப்போது மணிகண்டன் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் மின்பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே சந்திரா பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
Crime: கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற வாலிபர் கைது - கோவையில் போலீசார் விசாரணை
இந்த தகவல் அறிந்த பெரம்பூர் காவல்துறையினர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் உள்ளிட்ட இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மட்டும் இன்றி மயிலாடுதுறை மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறையில் புதியதாக துவங்க உள்ள மதுபான கடையை மூடக்கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை சின்ன கடை வீதியில் புதிதாக அரசு மதுபான கடை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் அதனை திறக்க கூடாது என வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினரும், அப்பகுதி பொதுமக்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் புதிதாக திறக்கப்பட உள்ள கடை அருகில் பள்ளி, கல்லூரிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோயில்கள் போன்றவை இருப்பதால் மதுக்கடையை திறக்க கூடாது என்றும், மீறி திறந்தால் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதில் பாட்டாளி மக்கள் கட்சி நகரத் தலைவர் கமல்ராஜா, முன்னாள் மாவட்ட செயலாளர் காமராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் மதிவாணன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Cyclone Mandous: "மாண்டஸ் புயலால் கடும் பாதிப்புகள் இல்லை" - நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் பேட்டி..