மேலும் அறிய

பேராவூரணியில் வரும் 18ம் தேதி தென்னை விவசாயிகள் சங்க மாநில மாநாடு

வியாபாரிகள் விவசாயிகளிடம் லாபக்காய் எடுப்பதை தவிர்க்க அரசே கிலோ கணக்கில் தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும்.

தஞ்சாவூர்: தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் 2வது மாநில மாநாட்டை தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் வரும் 18ஆம் தேதி சிறப்பாக நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின், தஞ்சாவூர் மாவட்ட 2 ஆவது மாநாடு பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. மாநாட்டுக்கு, மாவட்டத் தலைவர் எம்.செல்வம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஆர்.எஸ்.வேலுச்சாமி வேலை அறிக்கை வாசித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், தென்னை விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர்.சி.பழனிவேலு ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் மாநிலச் செயலாளர் விஜயமுருகன் சிறப்புரையாற்றினார். மாநாட்டில், புதிய மாவட்டத் தலைவராக எம்.செல்வம், மாவட்டச் செயலாளராக ஆர்.எஸ்.வேலுச்சாமி, மாவட்டப் பொருளாளராக ஆர்.அரங்கசாமி ஆகியோர் உள்ளடக்கிய 17 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.

வியாபாரிகள் விவசாயிகளிடம் லாபக்காய் எடுப்பதை தவிர்க்க அரசே கிலோ கணக்கில் தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும். தமிழக அரசு நியாய விலைக் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை விநியோகம் செய்ய வேண்டும். தஞ்சை மாவட்டத்தில், தென்னை சார்ந்த தொழில்களை ஒன்றிய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். 

பேராவூரணியில் கொப்பரை கொள்முதல் நிலையத்தை ஏற்படுத்த வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு உரம், பூச்சி மருந்துகளை மானிய விலையில் வழங்க வேண்டும். தென்னைக்கும் இன்சூரன்ஸ் திட்டத்தை விரிவு படுத்த வேண்டும்.

தென்னையை தாக்கும் வெள்ளை வாடல் நோய், காண்டாமிருக வண்டு தாக்குதல் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும். சென்னை விவசாயிகள் சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாட்டை டிச.18ஆம் தேதி பேராவூரணியில் சிறப்பாக நடத்துவது" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மாநில மாநாட்டையொட்டி, நவீன் ஆனந்தனை தலைவராகவும், ஆர்.எஸ்.வேலுச்சாமியை செயலாளராகவும், சி.ஆர்.சிதம்பரத்தை பொருளாளராகவும் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. இதில், மாவட்டம் முழுவதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கஜா புயலால் தென்னை சாகுபடி மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது. டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 62.42 லட்சம் தென்னை மரங்கள் வேரோடும், பாதியாக முறிந்தும் விழுந்தன. இதில், தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய வட்டங்களில் மட்டும் ஏறக்குறைய 45.07 லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன. இதனால், பொருளாதார ரீதியாக முன்னேறிக் கொண்டிருந்த தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் 20 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்றது.  வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இன்னும் பல பகுதிகள் மீண்டு வராத நிலையிலேயே உள்ளது. 

சில பகுதிகளில் புயலின் பாதிப்பு இன்னும் நீடிக்கிறது. இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கு நீண்ட காலம் தேவைப்படுகிறது.  இந்தக் கடினமான சூழ்நிலையிலும் விவசாயிகள் தென்னையை அழித்து மாற்று சாகுபடிக்குச் செல்லாமல், தொடா்ந்து, முழு நம்பிக்கையுடன் ஈடுபட்டு வருகின்றனா் என்பதும் குறிப்பிடத்தக்கது. விலை சரிந்த நேரத்திலும் விவசாயிகள் தென்னை சாகுபடியை கைவிடவில்லை. போராட்டம்தான் வாழ்க்கை என்றாலும் அதையும் சந்தித்து தென்னை சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Free Laptop: இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
என் நண்பர் மீது கை வைத்துட்டீங்க..சும்மா இருக்க முடியாது.! ஏவுகனைகள் ரெடி- டிரம்ப் அலறவிடும் கிம் ஜாங் உன்
என் நண்பர் மீது கை வைத்துட்டீங்க..சும்மா இருக்க முடியாது.! ஏவுகனைகள் ரெடி- டிரம்ப் அலறவிடும் கிம் ஜாங் உன்
Top 10 News Headlines: வெனிசுலாவிற்கு இடைக்கால அதிபர், இந்தியர்களுக்கு எச்சரிக்கை, பாரதிராஜா உடல்நிலை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: வெனிசுலாவிற்கு இடைக்கால அதிபர், இந்தியர்களுக்கு எச்சரிக்கை, பாரதிராஜா உடல்நிலை - 11 மணி வரை இன்று
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Free Laptop: இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
என் நண்பர் மீது கை வைத்துட்டீங்க..சும்மா இருக்க முடியாது.! ஏவுகனைகள் ரெடி- டிரம்ப் அலறவிடும் கிம் ஜாங் உன்
என் நண்பர் மீது கை வைத்துட்டீங்க..சும்மா இருக்க முடியாது.! ஏவுகனைகள் ரெடி- டிரம்ப் அலறவிடும் கிம் ஜாங் உன்
Top 10 News Headlines: வெனிசுலாவிற்கு இடைக்கால அதிபர், இந்தியர்களுக்கு எச்சரிக்கை, பாரதிராஜா உடல்நிலை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: வெனிசுலாவிற்கு இடைக்கால அதிபர், இந்தியர்களுக்கு எச்சரிக்கை, பாரதிராஜா உடல்நிலை - 11 மணி வரை இன்று
T20 Worldcup: ”இந்தியா வேண்டாம், டி20 உலகக் கோப்பையை மாத்துங்க” எகிறிய நாகினி பாய்ஸ், தட்டி விடும் பிசிசிஐ
T20 Worldcup: ”இந்தியா வேண்டாம், டி20 உலகக் கோப்பையை மாத்துங்க” எகிறிய நாகினி பாய்ஸ், தட்டி விடும் பிசிசிஐ
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Anbil Mahesh intermediate teachers: இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் குட்நியூஸ்.! வெளியாகப்போகும் அறிவிப்பு- அன்பில் மகேஷ் அதிரடி
இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் குட்நியூஸ்.! வெளியாகப்போகும் அறிவிப்பு.? அன்பில் மகேஷ் அதிரடி
தவெக-பாஜக கூட்டணி சாத்தியமா? திமுக அமைச்சர்கள் குறித்து அருண்ராஜின் பரபரப்பு பதில்!
தவெக-பாஜக கூட்டணி சாத்தியமா? திமுக அமைச்சர்கள் குறித்து அருண்ராஜின் பரபரப்பு பதில்!
Embed widget