மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி... மாவட்ட கலெக்டர் ரேவதி அறிவித்தது என்ன?
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி அலுவலர்களை தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நிறைவடைந்துள்ளது. இதில் வீடுகள் விடுபட்டிருந்தால் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் ரேவதி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதல் கட்ட பணியாக வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் பற்றிய கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வந்தது. தஞ்சாவூர் மாவட்டத்திலும் கணக்கெடுப்பாளர்கள் மூலம் வீடுதோறும் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணிகள் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டு, ஆகஸ்ட் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்தன.

இந்த நிலையில், கணக்கெடுப்பின்போது ஏதேனும் வீடுகள் விடுபட்டிருந்தாலோ அல்லது கணக்கெடுப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு சந்தேகங்கள் இருந்தாலோ, சம்பந்தப்பட்ட பொறுப்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி அலுவலர்களை தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வட்டாட்சியர்கள்:
திருவிடைமருதூர் – 9445000634, 9894272563
கும்பகோணம் – 9445000633, 948112136
பாபநாசம் – 9445000635, 9790468422
திருவையாறு – 9445000631, 6385618270
தஞ்சாவூர் – 9445000630, 8220275721
பூதலூர் – 958525115, 9843399944
ஒரத்தநாடு – 9445000632, 9788779986
பட்டுக்கோட்டை – 9445000636, 9787950507
பேராவூரணி – 9445000637, 9943028861
திருவோணம் – 986531973, 7904848945
நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள்:
பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையாளர் – 7397396238; அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையாளர் – 9150375407; திருவையாறு நகராட்சி ஆணையாளர் – 9600459529.
திருப்பனந்தாள் – 8925809540, ஆடுதுறை – 8925809535, வேப்பத்தூர் – 8925809541, திருபுவனம் – 8925809536, திருவிடைமருதூர் – 8925809538, சோழபுரம் – 8925809542, திருநாகேஷ்வரம் – 8925809539, சுவாமிமலை – 8925809543, பாபநாசம் – 8925809544, அய்யம்பேட்டை – 8925809545, மெலட்டூர் – 8925809546, அம்மாப்பேட்டை – 8925809547, மேலதிருப்பூந்துருத்தி – 8925809531, திருக்காட்டுப்பள்ளி – 8925809530, வல்லம் – 8925809527, ஒரத்தநாடு – 8925809528, மதுக்கூர் – 8925809534, பேராவூரணி – 8925809532, பெருமகளூர் – 8825809533 ஆகிய பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களையும் தொடர்பு கொள்ளலாம்.
வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணியில் தங்களது வீடு விடுபட்டிருந்தால், பொதுமக்கள் உடனடியாக மேற்கண்ட பொறுப்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரேவதி கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027-ன் முதல் கட்டமான, வீட்டுப் பட்டியல், வீட்டு வசதி கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த கணக்கெடுப்புக்கான களப்பணிகள் 2026 ஆகஸ்ட் 1 அன்று தொடங்கியது. வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னதாக, 2026 ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை சுய கணக்கெடுப்புக்கான தளம் ஒன்று உருவாக்கப்பட்டது.
இதன்மூலம், குடியிருப்பாளர்கள் தங்களது குடும்ப விவரங்களை அதிகாரப்பூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு இணையதளம் வழியாக ஆன்லைனில் சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டது. இந்த கட்டத்தில், கணக்கெடுப்பாளர்கள் 33 முக்கிய கேள்விகளுக்கு பதில்களை சேகரித்தனர். இவை வீட்டு சொத்துக்கள், குடிநீர், மின்சாரம், சுகாதாரம், சமையலறை வசதிகள், டிஜிட்டல் இணைப்பு போன்ற அத்தியாவசிய குடிமை வசதிகளுக்கான அணுகல் ஆகியவற்றை மதிப்பிடுகின்றன.
1948-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி, இந்த செயல்பாட்டின் போது சேகரிக்கப்படும் அனைத்து தனிநபர் பதில்களும் ரகசியமாக வைக்கப்படுகின்றன. நேரில் கணக்கெடுக்கும் பணிக்கு முன்பு பொதுமக்கள் சுய கணக்கெடுப்பு இணையதளம் மூலம் ஆன்லைனில் தங்கள் விவரங்களை தாங்களே பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது மக்களின் சிரமத்தை குறைத்தது.
Before You Go
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
ட்ரெண்டிங் செய்திகள்





















