மேலும் அறிய

விசிக விழிப்புணர்வு இல்லாத கட்சி அல்ல; வயிற்று எரிச்சலால் ஹெச்.ராஜா புலம்புகிறார்: திருமாவளவன்

விழிப்புணர்வு இல்லாத கட்சி வி.சி.க. அல்ல. கூட்டணியில் எந்த நேரத்தில் என்ன பேச வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என திருமாவளவன் தெரிவித்தார்.

தஞ்சாவூர்: விழிப்புணர்வு இல்லாத கட்சி வி.சி.க. அல்ல. கூட்டணியில் எந்த நேரத்தில் என்ன பேச வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என திருமாவளவன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வந்த வி.சி.க., தலைவர் திருமாவளன் நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க., கூட்டணிக்குள் இருக்கின்ற ஒவ்வொரு கட்சியும், பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவை.  

அரசியலுக்கு வந்து கால் நூற்றாண்டு கடந்து விட்டது

வி.சி.க., தேர்தல் அரசியலுக்கு வந்து கால் நுாற்றாண்டு கடந்து விட்டது. எனவே, கூட்டணியில், எந்த நேரத்தில் என்ன பேச வேண்டும். என்ன கோரிக்கை வைக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்தபோது, ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று தான் முழக்கமிட்டோம். தி.மு.க., கூட்டணிக்குள் இருப்பவர்கள் அரசியல் பேசுவதை, கூட்டணிக்கு வெளியில் இருப்பவர்கள் அரசியலாக்குவது ஏற்புடையதல்ல.

டில்லியில் இருப்பதை போல கூட்டணி ஆட்சி

எனவே, விழிப்புணர்வு இல்லாத கட்சி அல்ல நாங்கள். இது பல ஆண்டுகளைக் கண்ட காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் தெரியாதது இல்லை. அது சூது, சூழ்ச்சி நிறைந்த அரசியலாகும். டில்லியில், இருப்பதைப் போல ஒரு கூட்டணி ஆட்சி, தமிழகத்தில் உருவாக வேண்டும் என்றால், தமிழகத்தை ஆண்ட, ஆளுங்கட்சியாக இருக்கின்ற தி.மு.க., அ.தி.மு.க., இன்னும் தனித்து ஆட்சி செய்யக்கூடிய, அதிகாரத்தை பகிர்ந்தளிக்க இயலாத நிலையிலேயே மக்கள் ஆதரவை பெற்று இருக்கிறார்கள் என பொருள்.

தமிழகத்தில் பா.ஜ.,வால் அரசியல் செய்ய முடியவில்லை

தமிழகத்தில் பா.ஜ.,வால் அரசியல் செய்ய முடியவில்லை. தனித்து அவர்களால் குறிப்பிட்ட வாக்கு வங்கியை உருவாக்க முடியவில்லை. தி.மு.க., அல்லது அ.தி.மு.க.,வோடும்  ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்ற வயிற்று எரிச்சலால், ஹெச்.ராஜா பலவற்றை புலம்பி வருகிறார். 

இந்த ஆட்சியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்க வேண்டும் என்பது தான் கவர்னரின் திட்டம். இந்தியாவிலேயே மிகச் சிறப்பான கல்வித் திட்டத்தையும், உயர் கல்வி படிப்பதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட ஒரே மாநிலம் தமிழகம்.  

தான் கவர்னர் என்பதையே மறந்து விட்டார்

வட மாநிலங்களில், இருந்து மருத்துவம், பொறியியல் போன்ற கல்விக்கு ஏராளமானவர்கள் தமிழகத்திற்கு வருகிறார்கள். தமிழகத்தின் கல்வி தரம் தாழ்ந்து போய்விட்டது என்ற கவர்னரின் அரசியல் விமர்சனம். அவர் அரசியல்வாதியாகத்தான் இருக்கிறாரே தவிர, தான் ஒரு கவர்னர்  என்பதையே அவர் மறந்துவிட்டார் இவ்வாறு அவர் கூறினார். 

சுற்றி, சுற்றி வரும் சர்ச்சைகள்

கடந்த சில நாட்களாகவே விசிக – திமுகவை சுற்றி ஒரு அரசியல் சர்ச்சை விவாதம் ஏற்பட்டுள்ளது. விசிகவின் மது ஒழிப்பு மாநாடு ஒரு பிரச்னையை கிளப்ப கூட்டணிக்குள் விரிசல் என்று சர்ச்சை எழுந்தது. அடுத்ததாக ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற திருமாவளவனின் பழைய வீடியோ மீண்டும் பதிவிடப்பட்டு எரிகிற நெருப்பில் நெய்யை ஊற்றியது போல் மேலும் புகைச்சலை கிளப்பியது. மேலும் மதுரையில் போஸ்டர் ஒட்டி விசிக தொண்டர்கள் பற்ற வைத்தனர். கோவையில் வருங்கால முதல்வர் திருமாவளவனே என்ற கோஷம் போன்றவை பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் முதல்வரை திருமாவளன் சந்தித்தார். தொடர்ந்து அரசியல் சர்ச்சைகள் சற்றே ஓய்ந்து இருக்கிறது. இருப்பினும் கடந்த சில வாரமாகவே விசிகவை சுற்றி ஒரு அரசியல் சர்ச்சை மாறி, மாறி எழுந்து கொண்டே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget