மேலும் அறிய

துப்பாக்கிச்சூடு விவகாரம் : கடற்படையை கண்டித்து நவ.11-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - மீனவர்கள் தீர்மானம்..!

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படை மற்றும் மத்திய அரசை கண்டித்து தொழில் மறியல் செய்து மிகப்பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் இன்று  நடைபெற்ற மூன்று மாவட்ட மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படை மற்றும் மத்திய அரசை கண்டித்து நவம்பர் 11ம் தேதி தொழில் மறியல் செய்து மிகப்பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு விவகாரம் : கடற்படையை கண்டித்து நவ.11-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - மீனவர்கள் தீர்மானம்..!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்குச் சொந்தமான விசைப்படகில், மயிலாடுதுறை மாவட்டம் வாணகிரி கிராமத்தை சேர்ந்த வீரவேல், செல்வகுமார், செல்லத்துரை உட்பட 10 மீனவர்கள் கடந்த 15-ம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

கடந்த 20-ம் தேதி அதிகாலை, நாகை மாவட்டம் கோடியக்கரையில் இருந்து 30 நாட்டிகல் கடல் மைல் தொலைவில் பாக் ஜலசந்தி கடல் பகுதியான இந்திய, இலங்கை சர்வதேச கடல் பகுதி வழியாக கரை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் ஐஎன்எஸ் பங்காரம் என்ற இந்திய கடற்படை கப்பலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர்கள் மீனவர்களின் விசைப்படகை நிறுத்தும்படி கூறியுள்ளனர். ஆனால், மீனவர்கள் படகை நிறுத்தாததால், படகின் மீது துப்பாக்கியால் சுட்டனர்.

துப்பாக்கிச்சூடு விவகாரம் : கடற்படையை கண்டித்து நவ.11-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - மீனவர்கள் தீர்மானம்..!

இதில் வீரவேல் என்பவர் படுகாயமடைந்தார். இதையடுத்து, கடற்படைக்குச் சொந்தமான விமானப்படை தளத்தில் இருந்து சென்ற ஹெலிகாப்டர் மூலம் வீரவேல் மீட்கப்பட்டு, மதுரை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், மற்ற 9 மீனவர்கள் மற்றும் விசைப்படகை, நாகைதுறைமுகத்தில், கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் கடற்படையினர்  ஒப்படைத்தனர். அதன்பின் 9 பேரும், நாகை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகத்தில் மீனவர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியும் அதிர்வலையும் ஏற்படுத்தியது.

துப்பாக்கிச்சூடு விவகாரம் : கடற்படையை கண்டித்து நவ.11-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - மீனவர்கள் தீர்மானம்..!

இந்நிலையில் இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள தனியார் திருமண திருமண மண்டபத்தில் மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் ஆகிய 3 மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 3 மாவட்டங்களைச் சார்ந்த 21 கிராம மீனவப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மயிலாடுதுறை, காரைக்கால், நாகை மாவட்டம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், கொலை வெறி தாக்குதல் நடத்திய இந்திய கடற்படையையும், மத்திய அரசையும் கண்டித்து கடலூர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாவட்ட மீனவர்கள் சார்பில் வருகின்ற  நவம்பர் மாதம் 11ம் தேதி  வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கண்டன ஆர்ப்பாட்டம் எந்த இடத்தில் நடந்தாலும் மயிலாடுதுறை, நாகை, காரைக்கால்  ஆகிய 3 மாவட்டங்களும் இணைந்து நடத்திட வேண்டும் என்றும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் அன்று அனைத்து மாவட்ட மீனவர்களும் தொழில் மறியல் செய்திட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

T20 World cup 2022: ஜிம்பாவே டூ அயர்லாந்து டி20 உலகக் கோப்பையில் பலம் வாய்ந்த அணியை ஓட விட்ட கத்துக்குட்டிகள்...

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அவமானப்படுத்திட்டாங்க.. எவ்ளோ நாள் சகிச்சிக்க முடியும்? அஸ்வின் ஓய்வு.. தந்தை பரபர குற்றச்சாட்டு
அவமானப்படுத்திட்டாங்க.. எவ்ளோ நாள் சகிச்சிக்க முடியும்? அஸ்வின் ஓய்வு.. தந்தை பரபர குற்றச்சாட்டு
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அவமானப்படுத்திட்டாங்க.. எவ்ளோ நாள் சகிச்சிக்க முடியும்? அஸ்வின் ஓய்வு.. தந்தை பரபர குற்றச்சாட்டு
அவமானப்படுத்திட்டாங்க.. எவ்ளோ நாள் சகிச்சிக்க முடியும்? அஸ்வின் ஓய்வு.. தந்தை பரபர குற்றச்சாட்டு
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget